Labels

Monday, June 27, 2016

ஆங்கில ராணுவ முகாமில் இந்திய வீரர்களிடம் சுதந்திர தாகத்தை தூண்டிய பக்கீர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை
இந்தியா எங்கள் தாய் நாடு, 
இஸ்லாம் எங்கள் வழிபாடு, 
தமிழே எங்கள் மொழியாகும்,  
தன் மானம் எங்கள் உயிராகும் என தப்ஸ் இசைக்கருவியை இசைத்தவாறு ரமலான் நோன்பு நேரங்களில் அதிகாலை அமைதியை கிழித்துக் கொண்டு உறக்கத்தில் இருக்கும் இஸ்லாமியர்களை எழுப்பும் கணீர் குரலுக்குச் சொந்தக்காரர்கள் பக்கீர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

Wednesday, June 22, 2016

அழியும் அபாயத்தில் தேங்காய் நண்டுகள்!

அரிய வகையான தேங்காய் நண்டுகள் அதிகமாக வேட்டையாடப்படுவதால் அழியும் அபாயத்தில் உள்ளன.

அறியப்படாத இலங்கை அல்வா - தொதல்

இலங்கை இஸ்லாமியர்களின் சமையலில் இடம்பெறும் இனிப்பு வகை உணவுகளில் தொதல் மிகவும் முக்கியமான உணவு. இது பச்சரிசி, தேங்காய், சீனி, முந்திரி, ஏலக்காய் உட்பட்ட பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இப்பலகாரம் சர்க்கரைக் கழி என்று அழைக்கப்படுகிறது.

Tuesday, June 21, 2016

'அத்தோ' கை விரலின் ருசி


பாரிமுனையிலிருந்து இரண்டாவது கடற்கரை சாலையில் அதாவது மண்ணடியில் மாலை நேரங்களில் தள்ளுவண்டியில் பெட்ரோ மாக்ஸ் விளக்குகள் ஒளியை தந்து கொண்டிருக்கின்றது. பெரிய சைஸ் தோசை கல்லில் நூடுல்ஸ்,புதினா,எலுமிச்சை,முட்டை கோஸ்,பூண்டு,புளி தண்ணீர், வெங்காயம் இவற்றுடன் நல்லெண்யெய் கலந்து சுடச்சுட அத்தோ தயாராக அதனை அழகிய பீங்கான் தட்டுகளில் சாப்பிட பரிமாறுகின்றார்கள்.

Monday, June 20, 2016

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்குமா?


தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

Sunday, June 19, 2016

'மகள்கள் மூலம் உலகைக் காண்கிறேன்' - பனைமரம் ஏறி படிக்கவைக்கும் பார்வையற்ற ‘வைராக்கியக்காரர்’


பனை மரம் ஏறி, அதில் வரும் வருவாயைக் கொண்டு தனது இரு மகள்களையும் படிக்க வைத்து வருகிறார் பிறவியிலேயே பார்வையை இழந்த முருகாண்டி (53).

Tuesday, June 7, 2016

வாழ்வியல் ஒழுக்க நெறிகளை போதிக்கும் தாலாட்டுப் பாடல்கள் அழிந்து வரும் அவலம் ஆவணப்படுத்தி ஒலிபரப்புகிறதும் மதுரை வானொலிநாட்டார் பாடல் வகைகளில் ஒன்றான தாலாட்டு பாடல்கள் வாய்மொழி இலக்கியங்களில் ஒன்றாகும். "தால்" என்பது நாவைக் குறிக்கும். நாவினால் ஆட்டி ரா ரா ரா ரா, லு லு லு லு என்று ஓசை எழுப்பி குழந்தையை உறங்க வைப்பதால்  தாலாட்டுதல் பின்னர் தாலாட்டு என மருவியது.