Labels

Tuesday, May 31, 2016

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய ஆழ்கடல் மீன்

பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய ஆழ்கடல்  மீன் (PERISTEDION FISH) குறித்து தி இந்துவில் 31.05.2016 குறித்து தி இந்துவில் வெளியான எனது பதிவு...



மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் 45 நாள்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படும். அதன்படி, கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை 45 நாள்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையொட்டி, விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. ஆனால் நாட்டுப்படகுகுள் வழக்கம் போல் கடலுக்குச் சென்றன.

ஞாயிற்றுக்கிழமை பாம்பன் தெற்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கச் சென்று திங்கட்கிழமை கரை திரும்பிய நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் சிகப்பு நிற ஆழ்கடல் கலசல் மீன் ஒன்று சிக்கயது. அது சுமார் 600 கிராம் எடையும், 30 செ.மீ நீளமும்,  10 செ.மீ உயரமும் உடையதாகவும் இருந்தது. மீனின் வாய் அருகே இரண்டு கொம்பு போன்று இருந்தால் இதனை பாம்பன் மீனவர்கள் திங்கட்கிழமை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

இந்த மீனைப் பற்றி மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச்சித்துறை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது,

இந்த மீன் வகையின் பெயர் பெரிஸ்டிஇட்யன் (PERISTEDION)ஆகும். இதன் கொம்பு போன்ற பகுதி உணர்தலுக்காக ஏற்பட்ட ஒரு புடைப்பு ஆகும். மன்னார் வளைகுடா, வங்களா விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் இந்த மீன்கள் காணப்படுகின்றன. இதன் மேற்பகுதி சிகப்பு நிறத்திலும், கீழ்ப்பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படும். இதனை மீனவர்கள் திண்பது கிடையாது. 

விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை கடலின் அடி ஆழம்வரையிலும் வலை வீசி இழுக்கும் போது கடலின் சூழலியல் மண்டலத்தை காக்கக்கூடிய சிறிய வகை மீன்கள், நண்டு, சிங்கி, நத்தை போன்ற உயிரினங்கள் சிக்குகின்றன. இவ்வாறு சிக்குவதை கலப்பு மீன் அல்லது, சங்காயம் என்று மீனவர்கள் அழைக்கின்றனர். 

தினந்தோறும் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களினால் டன்கணக்கில் கலசல் மீன்கள் பிடிக்கப்படுவது உண்டு.  இதனை கோழி தீவனமாகவும், விவசாயத்திற்கு ஊரமாகப் பயன்படுத்தப்படுகிறது. 'கோழி தீவனத்துக்காகவும், உரங்களுக்காகவும் கடல் வளத்தை அழித்து வருவதால் தான் இலங்கை கடலோர எல்லைப் பகுதிக்குள், கடல் வளத்தை தேடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது' என தெரிவித்தனர்.


No comments:

Post a Comment