Labels

Wednesday, January 22, 2014

நகரத்தார் பொங்கல்

 

நகரத்தார் என்று அழைப்பப்படும் செட்டியார் சமூதாயத்தினர்  சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை உள்ளிட்ட பகுதிகளைப்பூர்வீகமாகக் கொண்டவர்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தகம் நிமித்தமாக நகரத்தார்கள் குடியேறி வெற்றிக் கொடிநாட்டியவர்கள். இவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையன்று சிவகங்கை நாட்டரசன் கோட்டையில் உள்ளகண்ணுடை நாயகி அம்மன் கோவிலில் நகரத்தார் சமூகத்தினர் ஒன்று கூடி பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய்கிழமை பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவார்கள்.


இந்த ஆண்டு செவ்வாய் பொங்கல் நிகழ்ச்சி நாட்டரசன் கோட்டை கண்ணுடை நாயகியம்மன் கோவில் வளாகத்தில் 21.01.2014 செவ்வாய்கிழமை மாலை 5 மணியளவில் நடபெற்றது.

நகரத்தார் சமுதாயத்தின் 896 குடும்பத்தின்  தலைவர் பெயரை, வெள்ளி குடத்தில் போட்டு, அம்மன் முன் குலுக்கி எடுக்கப்படும். இந்த ஆண்டு லெட்சுமணன் செட்டியார்  பெயர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பபட்டது. பின்னர் முதல் பானைக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து பொங்கல் வைக்க தொடங்கியதும், மற்றவர்களும் பொங்கல் வைத்தனர்.
நகரத்தார் சமுதாயத்தினர் சார்பில்  896 பேர் பொங்கலிட்டனர். இவர்களோடு, நேர்த்திக்கடன் செலுத்தியவர்களையும் சேர்த்து மொத்தம் 1,100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டனர்.

இந்த செவ்வாய் பொங்கல் விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று விழாவுக்கு வரும் தங்கள் நகரத்து சமுதாயத்துப் பெண்களை, தங்களது பிள்ளைகளுக்குபெண் பார்க்கும் வைபவமாகவும் கடை பிடித்து வருகின்றார்கள்.

பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியின்போது தங்களது பிள்ளைகளுக்கு ஏற்ற பெண்ணை பெற்றோர் பார்ப்பார்கள். பெண் பிடித்துப்போனால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை அவர்கள் பேசுவார்கள்.


செவ்வாய்பொங்கலை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டரசன்கோட்டையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப்பயணிகளும் செவ்வாய் பொங்கல் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். மேலும் இங்குள்ள செட்டிநாடு பாரம்பரிய வீடுகள், கோயில்களையும் பார்வையிட்டனர்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான நிகழ்ச்சியினை அறிய வைத்தமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

ராஜி said...

மன் மனம் கமழும் பொங்கலை பதிவாக்கியமைக்கு நன்றி சகோ!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வரிசையாகப் பொங்கல் வைக்கும் நேர்த்தியும், அழகும் , பார்க்கவேண்டுமெனும் ஆசையைத் தூண்டுகிறது.

Post a Comment