Labels

Friday, January 17, 2014

சிராவயல் மஞ்சு விரட்டு ஜல்லிகட்டு விழாவாக மாற்றம் பொது மக்கள் உற்சாகம்




தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் நடைபெறும் மஞ்சு விரட்டு ஆகும்.

300 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் சிராவயல் மஞ்சுவிரட்டு தை திங்கள் மூன்றாம் நாளில் நடைபெறும்.  மஞ்சுவிரட்டு போட்டி உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவாக மாற்றப்பட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.


 வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக. சிராவயலில் 80 ஏக்கர் நிலம் பொட்டலாக விடப்பபட்டுள்ளது. தொழுவ வாசலிருந்து சுமார் 100 அடி அகலத்தில் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு, பார்வையாளர்கள் அமர்ந்த பார்க்க வசதியாக மூன்றடுக்கு கேலரி அமைக்கப்பட்டு இருந்தது. மேலும்  ஜல்லிக்கட்டினை பொது மக்கள் பார்த்து ரசிப்பதற்கு வசதியாக 40 அடி நீளமுள்ள 6 கன்டெய்னர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தன.


சிராவயல் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 355 காளைகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள 188 காளைகள் கொண்டு வரப்பட்டன. இதில் கோமாரி தடுப்பூசி போடாத காளைகள், கொம்பு சீவப்பட்ட காளைகள் என 13 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 175 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன.

சிராவயல் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 93 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அதில் ஒருவர் மது அருந்தி இருந்ததினால் தகுதி இழந்து 92 வீரர்கள் கலந்து கொண்டனர். 



ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி காலை 10 மணியளவில் துவங்கி மதியம் 2 மணியளவில் நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்ட வீரர்களில் 40 பேருக்கு காளைகள் முட்டி காயம் ஏற்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாராமன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய கருப்பன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.


800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாவட்ட கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் தலைமையில் சிராவயல் ஜல்லிக்கட்டிற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 25 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

 மேலும் 10 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 5 தீயணைப்பு வணடிகளும், 5 விபத்து மீட்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தொகுத்து வழங்கியமைக்கு நன்றி நண்பரே...

Post a Comment