Labels

Thursday, December 12, 2013

கடல் அரிப்பு மூழ்கும் அபாயத்தில் சேதுக்கரை அனுமார் கோவில்

 
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் இருந்து 5 கி.மீ தூரத்தில் சேதுக்கரை உள்ளது.  இங்கு புகழ்பெற்ற அனுமார் கோவில் உள்ளது.  மேலும் இங்குள்ள கடல் ரத்னாகர தீர்த்தம்  என்றும் அழைக்கப்படுகின்றது.


 சித்திரை மற்றும் பங்குனி மாதங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் வந்து ஒவ்வொரு மாதம் அமாவாசை நாட்களிலும் தங்களின் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்கிறார்கள். அதுபோல ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் சேதுக்கரை அனுமார் கோவிலை தரிசிப்பதும் உண்டு.

சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனைக் கொன்று சீதையை மீட்க ராமர் தமது வானர    சேனையுடன்  சேனைகளுடன்  தென்கடற்கரையான சேதுக்கரைக்கு வருகிறார். அப்போது கடல் அரசனான வருணணைப் பிரார்த்தித்து 7 நாட்கள் தங்கி பிரார்த்தித்தார் என்பது சேதுகரையின் ஸ்தல வரலாறு.

இத்தகைய சிறப்பு பெற்ற சேதுக்கரை தற்போது கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது. சேதுகரை கடற்பரை ஓரங்களில் இருந்த பனை மற்றும் தென்னை மரங்கள் வேறோடு விழுந்து கடலோரங்களில் கிடக்கின்றன. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் கடலுக்குள் மூழ்கும் அபாயத்தில் சேதுகரை அனுமார் கோவில் உள்ளது.



இது தொடர்பாக நமது செய்தியாளரிடம் யாத்ரீகர் பாலமுருகன் (சிதம்பரம்) கூறியதாவது, சேதுகரைக்கு வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. ராமநாதபுரத்திலிருந்து அரிதாகதான் பேருந்து வசதிகள் உள்ளன.

மேலும் தீர்த்தமாடும் பக்தர்கள் தாங்கள் அணிந்த உடைகளை அப்படியே கடலிலும், கடல் ஓரங்களிலும் விட்டுச் செல்கின்றனர். இது மேலும் கடலோரத்தில் மனித கழிவுக் மிதந்தும் புனிதமும் கெடுகின்றது, என்றார்.

மேலும் அசோகன் என்ற யாத்ரீகர் பணியாளர் கூறியதாவது, சேதுகரை கோவில் கடல் அரிப்பினால் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கோவில் அருகே உள்ள தென்னை, பனை மரங்கள் எல்லாம் கடலுக்குள் சென்று விட்டன. இதே நிலை தொடர்ந்தால் கோவிலும் ஒரு நாள் கடலுக்குள் சென்று விடும். கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment