Labels

Saturday, December 14, 2013

அறியப்படாத தின்பண்டம் பனாட்டு


 


பனையின் முன்னர் அட்டுவரு காலை
நிலையின் றாகும் ஐயென் உயிரே
ஆகாரம் வருதல் ஆவயி னான"     (தொல்காப்பியம். எழு. 284)

தொல்காப்பியத்தில் பனாட்டு பற்றி வரும் வரிகள் இவை. மேலும் பனாட்டு என்றால் பிசைதல் என்றும் பொருள்.

நெய்தல் நில கடற்பகுதிகளில் வாழும் சிறுவர்-சிறுமிகளின் திண்பண்டமான பனாட்டு காலப்போக்கில் கடல் காற்றோடு கலந்து காணாமல் போய்விட்டது. இதற்கு பனைமரங்களை அழித்தது  தொலைக்காட்சி விளம்பரம் என காரணங்கள் பல சொல்லாம். இதன் விளைவு  தமிழ் பேசும் பழங்குடியின மக்களிடம் கூட நூடுல்ஸ் நுழைந்து விட்டது.


 இன்று இலங்கையிலும் இராமேஸ்வரம் தீவிலும் அரிதாக உள்ள இந்த திண்பண்டம் செய்யப்படும் செய்முறையைப் பற்றி பார்க்கலாம்.


பனை பழங்களை மேற் கருந்தோலினை உரித்து அதிலுள்ள கொட்டையுடன் கூடிய சந்தன நிற சதைகளை சாறு பிழிந்து ஒரு சட்டியில் கொட்டைகளுன் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பனை சதைகளுடன் கூல் போன்ற பதத்தில் நீரீணை சேர்த்து ஊற வைக்க வேண்டும். கொட்டையுடன் ஊற வைப்பதால் பனை பழத்தில் உள்ள கசப்பு மற்றும் காறல் சுவையை அகற்ற அது உதவுகின்றது.

நன்றாக ஊறியப் பின்னர்  அகன்ற பாத்திரத்தில் (அல்லது சிறிய தொட்டியில்) பனை பழம் சதையையும், பிழிந்த சாற்றினையும், நீரிணையும் சிறிது சிறிதாக ஊற்றி கால்களை நன்றாக கழுவிட்டு நன்றாக மிதிக்க வேண்டும். கூழ் பதம் அடைந்தவுடன் மண் மற்றும் பனை நாரை அகற்ற சல்லடையை பயன்படுத்திக் கொள்ளலாம். கொட்டையில் உள்ள சாற்றினை தண்ணீர் ஊற்றி சிறிது சிறிதாக சாற்றினை எடுக்கவும்.


சல்லடையால் வடிகட்டப்பட்ட பனைச் சாற்றை ஓலைப்பாயில் ஊற்றிப் பரப்ப வேண்டும். நேரடியாக வெயிலில் பனைச் சாற்றை காயவைக்காமல் பந்தல் போட்டு காய வைக்கப்படுகிறது. முதல் அடுக்கு காயந்ததும், இரண்டு மற்றும் மூன்று அடுக்குகளாக பனை சாற்றை அடுத்தடுக்குகளாக பரப்ப வேண்டும். இந்த மூன்று அடுக்கு பனைச் சாற்றினை பந்தல் அடியில் 15 இல் இருந்து 20 நாட்கள் காயவைக்கப்படுகிறது.

பின்னர் காயவைக்கப்பட்ட பனைச் சாறு கேக் போன்ற வடிவில் இரண்டாக மடித்து ஒரு இன்ஞ் வடிவில் கேக் போன்று சதுர வடிவில் வெட்டி இரண்டிலிருந்து மூன்று நாட்கள் காய வைத்தபின்னர். அழகிய ருசியான பனாட்டு தயார்.

படங்கள்: வினோத் அம்பேத்கார்

12 comments:

Johnny Vfx said...

Hmm...enaku romba piditha snacks :)

lingaraja sivanaiah said...

like like.. courier me the snack

kuttipapa said...

Ippadi oru inippa? kelvipattathe illai. ithai suvaithu parkka ithu kidaikka povathum illai.

விஜயன் said...

என் பள்ளிக்கூட நாட்களில் இந்த பனாட்டை தின்றிருக்கிறேன் ! , இலந்தை வடை,பனாட்டு போன்ற பண்டங்களை காலால் மிதித்து தயார் செய்கிறார்கள் தின்னக்கூடாது என்று வீட்டில் சொல்வார்கள், இருந்தாலும் கையில் கிடைக்கும் பைசாக்களுக்கு இந்த பண்டங்களை திண்பதுண்டு !.. இன்றளவும் கூட கால்களால் மிதித்து தான் தயாரிக்கிறார்களா !

வர்மா said...

காலத்தின் தேவையான பதிவு

suriyan theplayer said...

மிகவும் நன்றாக இருக்கிறது :)

அம்பாளடியாள் வலைத்தளம் said...

வணக்கம் !
வன்னி மண்ணில் பிறந்த எமக்கு பனாட்டு என்றால்
சொல்லவும் தேவையில்லை எமது தேவை கருதி
இதை மிக இலகுவாகவும் சுத்தமான முறையில்
கைகளால் பிழிந்து சாற்றை எடுத்து காயவைத்து
பதப் படுத்திய துண்டுகளை தேங்காய்ச் சொட்டுடன்
உண்டு களித்த சுவையான காலமதை மறக்கவே முடியாது .
பனாட்டு சுவையான இனிப்பு வகை என்பதை விடவும்
ஆரோக்கியமானதும் கூட .வெள்ளையான பற்களைப்
பெறுவதற்காகவே பனம் பழச் சாற்றைகொண்டு பற்களைத்
தீட்டி மகிழ்வதும் உண்டு :))
அருமையான பகிர்வுக்குப் பாராடுக்களும் வாழ்த்துக்களும் .

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

"அறிந்தவனுக்குத் தெரியும் அரியாலைப் பனாட்டு" என்பது அன்றைய சொல்வழக்கு. அந்த அளவு யாழ்ப்பாண மக்களிடம் ஒட்டிய சொல் பனாட்டு. வடக்குப் கிழக்கில் பனாட்டு உற்பத்தியிருந்த போதும் யாழ்ப்பாணம்- அரியாலை பிரபலியம்.
யாழ் தீபகற்பமெங்கும் பனாட்டுக்குக் குறைவில்லை. காலையில் பழஞ்சோற்றுக் கரைசலும் பனாட்டும், மாலையில் அம்பாளடியாள் சொல்வதுபோல் தேங்காய்ச் சொட்டுடன் , அந்தக் கூட்டு அமிர்தமென்பது இது தானோ என்பேன்.
எங்கள் வீட்டில் சமையல் அடுப்பில் மேல் புகை படும் வண்ணம் பலையோலை உமலில் தொங்கும்
அப்பபோ இறக்கி ஒரு அட்டி மடித்த படியே இருக்கும் விரித்தால் ஒரு சாண் நீள அகலத்தில், புகை நெடியுடன் பனம்பழ வாசம் தூக்கும்; சாப்பிடும் போது கொடுப்பில் ஒட்டியதை நாக்கால் தட்டி எடுக்கும் போது கரைந்து அது தரும் சுவையோ அலாதி.
தெவிட்டாத தீன் பண்டம். நாகரீகம் என்பது என்ன என்னென்று அறியாது நாகரீகம் பற்றிப் பீற்ரும் அன்றைய சில கூட்டங்கள், இதைத் தீண்டாதுகள். நான் அப்போது கழுதையையும் கற்பூரத்தையும்
நினைப்பேன்.
இலங்கையில் எங்குமே பனம்பழச்சாறு காலால் பிளிவது என நான் கேள்விப்பட்டதில்லை, பார்க்கவுமில்லை.அன்று சொந்தத் தேவைக்காக் குடிசைக் கைத்தொழிலாக வீடுகள் யாவிலும் பனாட்டுச் செய்வது இருந்துள்ளது. எங்கள் வீட்டில் ஆச்சி (அம்மாவின் தாயார்) பனம் பனம்பழக்காலத்தில் முற்றல் பச்சைப் பலையோலையில் இழைத்த பாயுடன் தயாராகிவிடுவார்;
யாழில் பருத்தித்துறையில் பாணிப் பனாட்டு என்பது , மிளகு வாசமெல்லாம் இருக்கும் பிரபலம்.
கொசுறு: இங்கே முன்பு திராட்சை ரசம் (வைன்) உற்பத்தி செய்வோர், காலால் தான் மிதித்துள்ளார்கள்.சி அன்றைய பிரபல நிறுவனங்கள் அழகான பெண்களை விட்டும் மிதித்ததாக இங்கே விளம்பரப் படுத்தியுள்ளார்கள்;
பாணும் (ரொட்டி-bread) காலால் மிதித்துள்ளார்கள்.ராஜி said...

செயற்கைப் பொருட்கள் கலக்காத ஒரு பண்டம்.

கோமதி அரசு said...

கேள்வி படாத திண்பண்டம். இப்போது அதை காலால் மிதிக்காமல் செய்ய முடியாதா?
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
பனபழம் சாப்பிட்டு இருக்கிறேன்.பனாட்டு சாப்பிட்டது இல்லை.

Rev. Godson said...

எனக்கு பயனுள்ள கட்டுரையாக இருந்தது. தங்களது தொடர்பு எண்ணை அனுப்ப முடியுமா? malargodson@gmail.com

Rev. Godson said...

எனக்கு பயனுள்ள கட்டுரையாக இருந்தது. தங்களது தொடர்பு எண்ணை அனுப்ப முடியுமா? malargodson@gmail.com

Post a Comment