Labels

Wednesday, November 13, 2013

தனுஸ்கோடியில் விரைவில் அலைச்சறுக்கு விளையாட்டு

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான சீ சர்பிங் எனப்படும் அலைச்சறுக்கு விளையாட்டை விரைவில் தனுஸ்கோடியிலும் விளையாடலாம்.


 ஹவாய் தீவு பழங்குடி இனத்து மக்களின் பாரம்பரிய விளையாட்டான அலைச்சறுக்கு போட்டி இன்று உலகளவில் கவனிக்கதக்க ஒரு சாகச விளையாட்டாக மாறி உ ள்ளது. ஆனால் தீபகற்ப தேசமான இந்தியாவில் ஏனோ அவ்வளவு பிரபலமாகவில்லை.

தமிழகத்தை பொறுத்தளவில் சென்னை கோவளத்தில் அலைச்சறுக்கு விளையாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாலும், உள்ளுர் மீனவ இளைஞர்களாலும் ஆர்வமாக விளையாடப்படுகிறது. அதேபோல் தனுஸ்கோடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய கடற்பகுதிகள் அலைச்சறுக்கு விளையாட்டிற்கு ஏற்ற இடமாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தனுஸ்கோடியில் உள்ள மன்னார் வளைகுடா வடக்கு கடல் பிராந்தியமும், பாக் ஜலசந்தி தெற்கு கடல் பிராந்தியமும் அலைச்சறுக்கு விளையாட நன்கு அலைகள் எழுந்து வரக்கூடியப் பகுதிகள் ஆகும்.

சமீபத்தில் ரெட் புல் எனும் பிரபல தனியார் குளிர்பான நிறுவனம் தனுஸ்கோடி கடல்களில்  அலைச்சறுக்கு விளையாட்டை பரிசோதனை செய்து பார்த்தது. அலைச்சறுக்கு பரிசோதனையில் தனுஸ்கோடியின் கடல் அலைகள் ரெட் புல் நிறுவனத்திற்கு கவர்ந்திடவே, விரைவில் அலைச்சறுக்கு சார்ந்த போட்டிகளை தனுஸ்கோடியில் நடத்த உள்ளாதாக ரெட் புல் நிறுவனம் அறிவிக்க உள்ளார்கள்.

1964 டிசம்பர் மாதப் புயலுக்கு பின்னர் தனுஸ்கோடியில் அரசினால் அங்கே வசிக்கும் மக்களுக்கு எந்தவிதமான அடிப்படைவசதிகளும் செய்து தராத நிலையில் தனுஸ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தனுஸ்கோடி மக்கள் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில் அலைச்சறுக்கு விளையாட்டினை பிரபல தனியார் நிறுவனம் நடத்த ஆர்வம் காட்டிவருவது தனுஸ்கோடியின் சுற்றுலா வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெருந்துணையாக அமையும் என்கிறனர் உள்ளுர்வாசிகள்.

தமிழகத்தில் பாரம்பரியமான  விளைட்டுகள் பல உள்ளள.   ஆனால்நெய்தல் நிலமான கடலோர பகுதி மக்களுக்கென பாரம்பரியமான விளையாட்டு என்று எதுவும் இல்லை. தற்போது தனுஸ்கோடி  மீனவர்கள் தற்போது தொழில் நலிவடைந்து மாற்றுத் தொழில் தெரியாமல் தவித்து வருகின்றனர். அத்தகைய மீனவ இளைஞர்களை அலைச்சறுக்கு விளையாட்டு  பக்கம் திசை திருப்பி அவர்களுக்கு பயிற்சி அளித்தால் தனுஸ்கோடி தலைதூக்கும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment