Labels

Wednesday, January 16, 2013

பாம்பன் பாலம் அரிய வீடியோ



இராமேஸ்வரத்தை இந்திய துணைக்கண்டத்துடன் இணைக்கும் பாம்பன் ரயில்வே பாலத்திற்கு வயது 100-யை அடைந்து விட்டது. அதே போல் இராமேஸ்வரத்தை தரைவழிப்பாலமாக இணைக்கும் பாம்பன் சாலைப் பாலம் 1988ம் ஆண்டில் தான் திறக்கப்பட்டது. 

1988ல் பாம்பன் சாலைப் பாலம் திறக்கப்படுவதற்கு முன்னர் எடுத்த புகைப்படமோ அல்லது வீடியோ கிடைக்குமா என்று நான் பல நாட்கள் தேடித்திரிந்திருக்கின்றேன். எனது நீண்ட நாள் தேடல். பலரிடம் கேட்டிருக்கின்றேன். தீவிலும் தீவிற்கு வெளியிலும் பல புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்குமிடங்களில் விசாரித்திருக்கின்றேன்.


ஒரு வழியாக, 1987ல் ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தவர்கள் தங்களின் கையடக்க வீடியோக்கருவியில் எடுத்த வீடியோ தற்செயலாக இப்போதுதான் கிடைத்தது. இந்த வீடியோவை எடுத்த பாக்கியசாலிகள் தற்சமயம் கனடாவில் இருக்கிறார்கள். இணையம் எவ்வாறு கண்டம் விட்டு கண்டம் தாண்டி மனிதர்களை தேடலின் வாயிலாக இணைக்கிறது. 

வான் வழியாக எடுக்கப்பட்டவை, கடல் மார்க்கமாக எடுக்கப்பட்டவை, தரை மார்க்கமாக எடுக்கப்பட்டவை, சாலை மார்க்கமாக எடுக்கப்பட்டடவை, ரயில் மார்க்கமாக எடுக்கப்பட்டவை என பல வகைகளில் பாம்பன் பாலத்தை பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை எனது முகப்புத்தகத்திலும், என் வலைப் பக்கங்களிலும் பகிர்ந்திருக்கின்றேன். ஆனால் அவற்றையெல்லாம் விட இது எனக்கு முக்கியமான பகிர்வாக தெரிகின்றது. 

1988-ல் பாம்பன் சாலைப்பாலை திறப்பதற்கு முன் இராமேஸ்வரம் தீவை அடைவதற்கு இரண்டெ மார்க்கங்கள் தான் இருந்தன. ஒன்று ரயில் வழியாக வர வேண்டும் அல்லது படகு வழியாக வரவேண்டும். இப்பாலம் திறக்கப்பட்ட பின் தீவின் வரலாறும் மாறத் துவங்கியது. அதனை தருணம் வரும்போது எழுதுகின்றேன். 

No comments:

Post a Comment