Labels

Tuesday, December 24, 2013

மீனவப் பெண்கள் தலைமைத்துவத்திற்கு வர வேண்டும்-ஜோ டி குரூஸ்.


2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை எழுத்தாளர் ஜோ டி குரூஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.சென்னை லயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு சென்னையிலுள்ள கப்பல் போக்குவரத்துத் துறையில் இன்று மிக முக்கியமான நிபுணராக இருக்கிறார். ''நான் ஒரு பிறவி மீனவன்!'' என்று நெஞ்சு நிமிர்த்துகிற ஜோ, தென் தமிழக மீனவக் கிராமமான உவரியின் பிள்ளை. நெய்தல் நிலத்தின் நிலையற்ற வாழ்வை உப்பு மொழியோடு பதிவு செய்திருந்த இவரது 'ஆழிசூழ் உலகு' மற்றும் கொற்கை ஆகிய இரண்டு நாவல்களும் தமிழ் எழுத்துலகின் முக்கியமானப்  பிரதிகள். அடுத்ததாக கப்பல்கள் சார்ந்த பின்னணியில் அடுத்த நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார் ஜோ டி குருஸ். இனி அவரிடம் உரையாடியதிலிருந்து...

Tuesday, December 17, 2013

உத்திரகோசமங்கை மங்கள நாதசுவாமி திருக்கோவில் போக்குவரத்து வசதி செய்து தரக்கோரிக்கை

 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியிலிருந்து 10 கிலோ மீட்டத் தொலைவில் உள்ளது உத்திரகோசமங்கை. சிதம்பரம் கோவிலுக்கு முன்பே இந்த கோவில் தோன்றியதால் உத்திரகோச மங்கைக்கு ஆதி சிதம்பரம் என்ற ஒரு பெயரும் உண்டு. மேலும் இராவணின் மனைவி மண்டோதரி இங்கு வந்து வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஸ்தலம் பற்றி மாணிக்கவாசகர் 9 பாடல்கள் பாடி உள்ளார். உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழா 17 ஆண்டுகளுக்கு 2010ம் ஆண்டு நடைபெற்றது. 

Saturday, December 14, 2013

அறியப்படாத தின்பண்டம் பனாட்டு


 


பனையின் முன்னர் அட்டுவரு காலை
நிலையின் றாகும் ஐயென் உயிரே
ஆகாரம் வருதல் ஆவயி னான"     (தொல்காப்பியம். எழு. 284)

தொல்காப்பியத்தில் பனாட்டு பற்றி வரும் வரிகள் இவை. மேலும் பனாட்டு என்றால் பிசைதல் என்றும் பொருள்.

நெய்தல் நில கடற்பகுதிகளில் வாழும் சிறுவர்-சிறுமிகளின் திண்பண்டமான பனாட்டு காலப்போக்கில் கடல் காற்றோடு கலந்து காணாமல் போய்விட்டது. இதற்கு பனைமரங்களை அழித்தது  தொலைக்காட்சி விளம்பரம் என காரணங்கள் பல சொல்லாம். இதன் விளைவு  தமிழ் பேசும் பழங்குடியின மக்களிடம் கூட நூடுல்ஸ் நுழைந்து விட்டது.

Thursday, December 12, 2013

கடல் அரிப்பு மூழ்கும் அபாயத்தில் சேதுக்கரை அனுமார் கோவில்

 
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் இருந்து 5 கி.மீ தூரத்தில் சேதுக்கரை உள்ளது.  இங்கு புகழ்பெற்ற அனுமார் கோவில் உள்ளது.  மேலும் இங்குள்ள கடல் ரத்னாகர தீர்த்தம்  என்றும் அழைக்கப்படுகின்றது.

Tuesday, December 3, 2013

பாம்பன் ரயில் பாலம் நூற்றாண்டு விழாவை பாம்பனில் நடத்த கோரிக்கை

பாரம்பரியமான பாம்பன் ரயில்பாலம் பயன்பாட்டிற்கு வந்து  100 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.  இதனைத் தொடர்ந்து பாம்பன் பாலத்திற்கு பிப்ரவரி 24, 2014 அன்று நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது.

Friday, November 29, 2013

2 ஆண்டுகளாக இலங்கை சிறையில் வாடும் 5 மீனவர்கள் தாயகம் திரும்புவர் என கண்ணீருடன் காத்திருக்கும் மீனவ குடும்பங்கள்


ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 5 பேர் இலங்கை சிறையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்போது விடுதலையாகி தாயகம் திரும்புவார்கள் என கண்ணீருடன் காத்திருக்கின்றன அவர்களது குடும்பங்கள்.

இலங்கை சிறையிலுள்ள மீனவர் பிரசாத்தின் மனைவி ஸ்கெனிடா
தனது குழந்தைகள் ரோசன் மற்றும் ஜெயஸ் உடன்

Sunday, November 24, 2013

பாம்பன் கலங்கரை விளக்கத்தை சுற்றுலாப் பகுதியாக மாற்ற கோரிக்கை

 


சென்னையிலுள்ள மெரினா கலங்கரை விளக்கத்தை போன்று பாம்பனில் உள்ள வரலாற்று பிரசித்திப் பெற்ற கலங்கரை விளக்கத்தையும் சுற்றுலாப் பகுதியாக்கவும், கலங்கரை விளக்கத்தில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Friday, November 22, 2013

பன்னிதான் மேய்க்கனுமா சாமி? படிக்கக்கூடாதா?பன்னிதான் மேய்க்கனுமா சாமி? படிக்கக்கூடாதா?

சாதிச் சான்றிதழ் கொடுக்காமல் அழைக்கழிக்கப்படும் காட்டுநாயக்கன் சமுதாயத்தினர்.

Thursday, November 21, 2013

வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் கோரும் மீனவர்கள்

1997ம் ஆண்டு நவம்பர் 21ம் நாள் 40 நாடுகளின் பிரதிநிதிகள் புது டெல்லியில் உலக மீன்பிடித் தொழிலாளர் பேரவையை உருவாக்கினர். இதில் உலகளாவிய ரீதியில் மீனவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளுக்கும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் தீர்வுகாணும் வகையில் இப்பேரவை நவம்பர் 21-ம் தேதியை சர்வதேச மீனவர் தினமாக பிரகடனப்படுத்தினர்.

நவம்வர் 21, சர்வதேச மீனவர் தினமான இன்று தமிழக, புதுச்சேரி, இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் கருத்துகள். 

Tuesday, November 19, 2013

ஆபத்தில் தேங்காய் நண்டுகள்கணுக்காலிகள் உயிரினத்தை சேர்ந்தவை நண்டுகள். இவற்றில் பல வகை இருந்தாலும் பலரும் பார்த்திராத நண்டு வகையை சேர்ந்தது தேங்காய் நண்டு. பத்து கால்களுடன் ஓட்டினால் ஆன உடலமைப்பை கொண்டவை இவைகள்.
நண்டுகள் கடலில் முட்டைகளையிடும். முட்டையிலிருந்து வெளிவந்து சிப்பி மற்றும் சங்குகளில் ஒட்டிக்கொண்டு தங்களின் வாழ்க்கையை துவங்கும். வளர்ந்த பின் நிலத்தில் குழிகளைத் தோண்டி அதில் தேங்காய் நார்களைப் பரப்பி மெத்தென்று வாழ ஆரம்பித்துவிடும்.

Wednesday, November 13, 2013

தனுஸ்கோடியில் விரைவில் அலைச்சறுக்கு விளையாட்டு

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான சீ சர்பிங் எனப்படும் அலைச்சறுக்கு விளையாட்டை விரைவில் தனுஸ்கோடியிலும் விளையாடலாம்.

Tuesday, November 5, 2013

ராமேஸ்வரத்திலும் தங்கச் சுரங்கம்?
ராமேஸ்வரம் தீவில் தங்கச்சுரங்கங்கள் உள்ளதாகவும் அதனை அகழ்வராய்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Monday, November 4, 2013

நரிக்குறவர்களின் நலம் நாடும் நல்லாசிரியர் உதயகுமார்


ஒரு இயக்கம் செய்ய வேண்டிய காரியத்தை 25 வருடங்களாக தனி மனிதனாகச் செய்து கொண்டிருக்கிறார் நல்லாசிரியர் விருதுக்குச் சொந்தக்காரரான உதயகுமார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடா னையை ஒட்டியுள்ளது பண்ணவயல் கிராமம். இங்குள்ள சமத்துவபுரத்தில் குடியிருக்கும் நரிக்குறவர்கள், உதயகுமாரை தோளில் தூக்காத குறையாக கொண்டாடுகிறார்கள். சில வருடங்களாக அந்த மக்களுக்கு இவர்தான் காட் ஃபாதர்.

Thursday, October 17, 2013

பாம்பன் விவேகானந்தர் இல்லம்


உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்,அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார் . பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகானந்தரின் பாதங்கள் தன் தலையில் பட்ட பிறகே தரையைத் தொடவேண்டும் என முழங்காலிட்டு அமர்ந்த சேதுபதி மன்னரின் செயலை மறுத்து அவரை ஆரத் தழுவினார் விவேகானந்தர். 

Tuesday, October 15, 2013

புயல் விழுங்கிய தனுஷ்கோடிக்கு புதுவாழ்வு கொடுத்த புதுமைப் பெண்


தனுஸ்கோடி பள்ளி மாணவர்களுடன் ஆசிரியை மேரி

பரபரப்பாக இயங்கும் துறைமுகம், அதன் அருகே ரயில் நிலையம், நிரம்பி வழியும் சுற்றுலா பயணிகள், இருபுறமும் நீலக் கடலும், இதமானக் காற்றும். தேனீக்களாய் எந்நேரமும் சுறுசுறுப்பாய் சுழலும் மீனவர்கள்.. இவையெல்லாம் தனுஷ்கோடியின் அடையாளமாக இருந்தது ஒருகாலம். 

1964-ம் ஆண்டு டிசம்பர் 24-ல் ராமேஸ்வரத்தை தாக்கிய புயலால் இந்தியாவின் தேசப் படத்திலிருந்து தனுஷ்கோடி துறைமுகம் துடைத்தெறியப்பட்டது. அந்த பாதிப்புகளின் தாக்கத்திலிருந்து இன்னமும் முழுவதுமாக மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தனுஷ்கோடி. இங்குதான் தனது இதய நோயையும் பொருட்படுத்தாது சேவை செய்துகொண்டிருக்கிறார் ஆசிரியர் பிரான்சிஸ் ஆரோக்கியமேரி. 

நிறைவேறுமா அப்துல் கலாமின் கனவு? அக்டோபர் 15 அப்துல் கலாமின் பிறந்தநாள்


Tuesday, October 1, 2013

அடிப்படை வசதிகள் இல்லாத தனுஸ்கோடி பள்ளி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த துறைமுகம், அதனருகே ரயில்வே நிலையம், நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள், இருபுறமும் நீலவர்ணத்தில் கடலும், இதமானக் காற்றும். தேனியைப் போன்று சுறுசுறுப்பாக எந்த நேரமும் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் இவையெல்லாம் ஒரு காலத்தில் தனுஷ்கோடியின் அடையாளமாக இருந்தது. இது எல்லாம் பழையக் கதை.
1964-ம் ஆண்டு டிசம்பர்-24 அன்று தாக்கியப் புயலில் இந்தியாவின் தேசப் படத்திலிருந்து தனுஷ்கோடி துறைமுகம் காணாமல் போனது. அன்று தாக்கியப் புயலின் கோரத்திலிருந்து இன்று வரையிலும் இன்னும் மீளவே இல்லை.

Thursday, September 19, 2013

கண்தானே போச்சு.. கடல் வத்திப் போகலியே..!


வலையுடன் தொழிலுக்குச் செல்லும் அருள் ஜேசுராஜ்
வழக்கமாய், இலங்கை கடற்படையால் துரத்தியடிக்கப்பட்டு துன்பப்பட்டு வரும் மீனவர்களின் கதைகளையே கேட்டுச் சங்கடப்பட்டுக் கிடப்பவர்களுக்கு, மீனவர் அருள் சேசுராஜின் சுயசரித்திரம் நம்பிக்கை தரும் உத்வேக டானிக்! 

Wednesday, September 18, 2013

கிராமத்தை காலி செய்யும் மக்கள் உச்சிப்புளி விமான நிலையம் விரிவாக்கத்தால் பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  உச்சிப்புளி கடற்படை விமான நிலைய விரிவாக்கத்தால் உசிலங்காட்டு வலசை கிராமமே தங்கள் கிராமத்தை காலி செய்யும் நிலை உருவாகியுள்ளது.

Tuesday, June 4, 2013

ராமேஸ்வரம் வரலாற்றுக் கோடுகள்

ராமேஸ்வரம் தீவின் வரலாற்று வரைபடத்தை தொகுத்துக் கொண்டிருக்கின்றேன். அதற்கான சிறிய பதிவு இது :-)

Saturday, March 23, 2013

தனுஷ்கோடி ஓவியங்களாக...தனுஷ்கோடி ஓவியங்களாக சிலவற்றை இணையேற்றம் செய்திருக்கின்றேன். இன்னும் தேடி அலைந்து கொண்டும் இருக்கின்றேன் :-)

Wednesday, January 16, 2013

பாம்பன் பாலம் அரிய வீடியோஇராமேஸ்வரத்தை இந்திய துணைக்கண்டத்துடன் இணைக்கும் பாம்பன் ரயில்வே பாலத்திற்கு வயது 100-யை அடைந்து விட்டது. அதே போல் இராமேஸ்வரத்தை தரைவழிப்பாலமாக இணைக்கும் பாம்பன் சாலைப் பாலம் 1988ம் ஆண்டில் தான் திறக்கப்பட்டது. 

1988ல் பாம்பன் சாலைப் பாலம் திறக்கப்படுவதற்கு முன்னர் எடுத்த புகைப்படமோ அல்லது வீடியோ கிடைக்குமா என்று நான் பல நாட்கள் தேடித்திரிந்திருக்கின்றேன். எனது நீண்ட நாள் தேடல். பலரிடம் கேட்டிருக்கின்றேன். தீவிலும் தீவிற்கு வெளியிலும் பல புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்குமிடங்களில் விசாரித்திருக்கின்றேன்.