Labels

Sunday, April 1, 2012

விகடன் வலையோசையில் எனது வலைத்தளம்




இந்த வாரம் ஆனந்தவிகடன் வலையோசைப் பகுதியில் என் வலைப்பூ வெளியாகியுள்ளது. மட்டற்ற மகிழ்ச்சி.  இன்னும் பொறுப்புடன் எழுத வேண்டும் .
 

கடந்த செப்டம்பர் 2011 மாதம் மயிலாப்பூர் ஆழ்வார் தாத்தாவின் கல்விப் பணி பதிவுடன் ஆரம்பித்தேன். தற்போது 41 பதிவுகளை தாண்டியுள்ளேன். இதில் 20 பதிவுகள் கல்கி, தீக்கதிர், தினமலர், மக்கள் உரிமை உள்ளிட்ட பத்திரிக்கைகளில்  வெளிவந்து விட்டன.

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை இடம் பெயர்ந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன.. இந்த தருணத்தில் எனக்கு வாசிப்பும் எழுத்தும் அந்நியமாகிப் போனது.  சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் படிக்க பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டென். முன்னதாக இதழியல்  புதுக் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் படித்ததே போதும் என்ற திருப்தியுடன் சிங்கப்பூர் பயணமாகலாம் என்று இருந்தென். 

பல்கலைக்கழகத்தில் எனது துறைத்தலைவர் பேரா. ரவீந்திரன் , பேரா. லியோ என் சக அலுவலக நண்பர் அபுசாலிஹ், மூத்தப் பத்திரிக்கையாளர் அ.குமரேசன் ஆகியோர் என்னை  தொடர்ந்து எழுத உற்சாகப்படுத்தினார்கள். ஆசிரியர்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தையை மட்டும் கூறிவிட்டு நான் நகர்ந்து விட இயலாது. என் எழுத்தில் அவர்களின் பெயர்களையும் காப்பாற்ற வேண்டிய அமானிதப் பொறுப்பும் எனக்குள்ளது. அனை என் எழுத்தில் இனி வெளிபடும்.

நண்பர்களை மறப்பது என்பது அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று சொல்வதற்கு தகும். என் எழுத்தில் என்னை விட நண்பர்களே அதிகம் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்ற தேடித்திரிகின்றேன் நான்.


3 comments:

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

கோவை நேரம் said...

வாழ்த்துகள்

Amutha M said...

வாழ்த்துகள் Rafi..

Post a Comment