Labels

Thursday, March 15, 2012

நானும் உலக சினிமாவும் :-)


நான் சமீபத்தில் பார்த்த ஜப்பானிய திரைப்படம் The End of Summer வாழ்வியல், கலாச்சாரம், பண்பாடு என பல விசயங்கள் தமிழ் சூழலுக்கு பொருந்திப் போகின்றது. வயதான தந்தை  அன்னாரின் நான்கு மக்கள் மற்றும் வயதான தந்தையின் முன்னாள் காதலி இவைகளுடன்  அந்த கோடை காலம்.

வயதான தந்தையின் செயல்களை அவருடைய மக்கள் எதிர்கொள்ளும் முறைகளும், தந்தையாருக்கு உடல்நலம் குன்றியதும் அவர்களிடையெ ஏற்படும்  பாச உணர்ச்சி வெளிப்பாடுகள்... என இந்த திரைப்படத்தை தமிழ் சூழலில் அதிகம் பொறுத்தி பார்க்க முடிகின்றது.

பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன்னர் ஜப்பான் என்றால் நான் அறிந்தது

1) Made in japan
2) ஹிரோசிமா, நாகசாகி
3) 3) ஹைக்கூ கவிதைகள்
4) காமிக்ஸ் புத்தகங்கள்
5) சாமுராய்
6) அகிரா குரசோவா  அவ்வளவுதான்.

சமீபத்தில் ஜப்பானிய மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என பேராசையும் ஏற்பட்டிருக்கின்றது.

ஜப்பானிய மொழியை கற்றுக்கொண்டு ஹைக்கூ கவிதைகள் எழுதி எல்லாம் யாருடைய மனதையும் புன்படுத்தும் எண்ணம் இல்லை ஆகவெ கவலை வேண்டாம்.
------------------
ஈரானிய சினிமாக்களின் அறிமுகம் புதுக்கல்லூரியில் படிக்கும் போது ஏற்பட்டது. அதிலிருந்து குறைந்தது 30 ஈரானிய சினிமாவாவது பார்த்திருப்பேன்.

சமீபத்தில் பல்கலைக்கழகத்தில் நண்பன் சலிம் ஈரானிய சினிமா பார்க்கலாம் வாங்க என அரபித்துறைக்கு அழைத்தான். அரபித்துறையில் 'இஸ்லாமும் மேற்குலகமும்' என்ற பாடம் இருந்தது. அதில் அவன் சேர்ந்திருந்தான் துணைக்கு நான்.  இதில் எங்கிருந்து ஈரானிய சினிமா வந்தது என கேட்கலாம்.

இஸ்லாமும் மேற்குலகமும் பாடத்தில் இரண்டு ஈரானிய மாணவிகளும் சேர்ந்திருந்தனர். ஆக ஈரானிய சினிமா என்றால் இப்போது புரிந்திருக்கும்.

 அரபித்துறையில் பாடம் எடுக்கும் ஆசிரியர் உட்பட அந்தப் பாடத்தில் சேர்ந்திருந்த மாணவர்கள் உட்பட யாவரும் ஆங்கிலத்திலேயெ பேசிக் கொண்டிருப்பார்கள். நமக்கு ஆங்கிலத்தில் தகராறு ஆகவெ வெறுமனே வாய் பார்ப்பதற்கு விருப்பமின்றி மறுத்து விட்டேன்.

ஈரானிய சினிமா பற்றி துறை முழுவதும் செய்தி காட்டு தீ போன்று பரவி விட்டது. நான், நீ என்று அதில் சேர போட்டி வேறு....

நண்பர்களே ஈரானில் தண்டனைகள் எல்லாம் பயங்கரமாக இருக்கும். ஆ.. ஊ..ன்னா நறுக்  தான் என எச்சரிக்கவே எவனும் ஈரானிய சினிமா பார்க்க போகலை.

1 comment:

sirippusurendar said...

சார் போட்டோ பார்த்து childrens of hevan படத்த பத்தி எதாவது எழுதி இருப்பிங்கனு நினச்சேன் ஏமாத்திட்டிங்களே.

Post a Comment