Labels

Sunday, March 25, 2012

கல்பாக்கம் அணுஉலையும், காயசண்டிகை எரிமலையும்

  

கல்பாக்கம் அணுமின் நிலையத்திலிருந்து கடலில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உறங்கும் எரிமலை 258 ஆண்டுக்கு பின்னர் தற்போது விழிக்கத் துவங்கியுள்ளது. இதனால் கல்பாக்கம் அணுஉலைகளுக்கு ஆபத்து என சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

258 ஆண்டுகளாக தமிழக மக்களால் அறியப்படாத  கடலடி எரிமலையை 1757ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் நாள் இந்த எரிமலை வெடித்ததை கடலில் அவ்வழியாக பயணித்த பாண்டிச்சேரி மாலுமிகள் பதிவு செய்துள்ளனர்.
பரிணாமக் கோட்பாடின் தந்தையாக அறியப்படும் சார்லஸ் டார்வின் பவளப்பாறைகளின் கட்டமைப்பும், அவற்றின் அமைவிடங்களும் என்ற நூலிலும். கடல் எரிமலை வல்லுநர் பி. ஹெடெர்வாரி தமது ஆய்வு நூலிலும், அமெரிக்காவின் ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிட்யூட்னொல் முன்னெடுக்கப்படும் Global Volcanism Program-ன் நிறுவனம் தமது இணையதளத்திலும், உலகெங்கும் எரிமலைகளை திரட்டி தகவல்களை வெளியிடும் ஆய்வாளர் ஜான் தமது இணையதளமான www.volanolive.com-லும் கல்பாக்கம் அணுஉலைகளுக்கு அருகிலுள்ள எரிமலையைப் பற்றி பதிவு செய்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கல்பாக்கம் அணுஉலையில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரமன்கேணி என்ற கடலோர கிராம மீனவர்கள் 40 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெரும் புகையும், தீக்குழம்புகளுடன் கடலிருந்து மேலெழும்புவதைப் பார்த்துள்ளனர்.  10லிருந்து 15 கிலோ மீட்டர் தூரங்கள் வரையிலும் கடலில் பெரும் மாற்றம் இருந்ததைக் காணமுடிந்தாகவும் அப்போது வெப்ப நீர்குமிழிகள் அவர்களின் கையில் பட்டவுடனே கொப்பளங்களா மாறிவிட்டன. உடனே உயிர் பிழைத்தால் போதும் என கரைக்கு திரும்பிவிட்டனர். கரைக்கு திரும்பி பின்னரும் புகை மண்டலத்தை தெளிவாகப் பார்க்க முடிந்தாகவும் முன்பு  போல் இந்தப் பகுதியில் மீன்வளமும் இப்போது இல்லை என்றும் கடந்த 21.03.2012 அன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறினர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கல்பாக்கம்¢அணு மின்நிலையத்திற்கு எரிமலையால் ஏற்பட வாய்புள்ள அபாயங்களை ஆய்வு செய்து கல்பாக்கம் அணுஉலைகளும் கடல் எரிமலையும் என்ற நூலை 25 ஆண்டுகளுக்கும் மேலாக அணுஉலைகளுக்கு எதிராக பேசியும் எழுதியும் வரும் மருத்துவர் வீ. புகழேந்தி மற்றும் மருத்துவர் ரமேஷ் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். மணிமேலைக் காப்பியத்தின் பாத்திரமான காயசண்டிகை என்ற பெயரையும் இந்த எரிமலைக்கு சூட்டியுள்ளனர்.


காயசண்டிகை எரிமலை வெடித்தால் அதனால் சுனாமி ஏற்பட்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கே பேராபத்து ஏற்பட வாய்புண்டு. சென்னையில் இருந்து 45-60 கிலோ மீட்டர் தொலைவிலும் பாண்டிச்சேரியில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவிலும் காஞ்சிபுரத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் கல்பாக்கம் அணுஉலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜப்பானின் புக்குஷிமா அணுமின்நிலைய விபத்திற்கு பிறகு 210 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைந்துள்ள ஜப்பான் தலைநகரம் டோக்கியோ நகரின் குடிநீரையும், அங்கு வசிக்கும் தாய்மார்களின் பாலையும் கதிர்வீச்சுக்குள்ளாகி இருப்பதில் இருந்து நம்முன் காயசண்டிகை எரிமலையால் உள்ள பிரச்சனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.

முன்னதாக 2003 ஆம் ஆண்டில் இந்நூல் ஆசிரியர் மருத்துவர் புகழேந்தி கல்ப்பாக்கம் அணு மின் நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அவர் குடும்பங்களில் உள்ளவர்கள் Multiple Myeloma-எனும் எலும்பு மஜ்ஜைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதை நிருபணம் செய்துள்ளார். அப்போது, மூன்று பேர் 21 நாள் இடைவெளியில் இந்தப் புற்றுநோயால் அடுத்தடுத்து பரிதாகமாக இறந்தும் போனார்கள். மருத்துவர் புகழேந்தியின் ஆய்வையோட்டி 2010-ம் ஆண்டில் டிராஃபிக் ராமசாமி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை புற்று நோயால் இறந்தவர்களின் பட்டியலைக் கேட்டு இருந்தார். அணு மின் நிலையத்தார், 10 வருடக் காலகட்டத்தில் இதுவரை 244 பேர் புற்று நோயால் இறந்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


கூடங்குளம் அணுஉலைகளை உடனடியாக திறப்பதில் மும்முரமாக இருக்கும் மத்திய, மாநில அரசுகள் கல்பாக்கம் அணுஉலைகளில் பணிபுரிந்ததோர்களையும், கல்பாக்கத்¬த் சுற்றி வாழும் கிராமத்து மக்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அதன் உண்மைகளை வெள்ளை அறிக்கைகளாக பொது மக்கள் மத்தியில் வைக்குமேயானால் அதுவே நம் பிற்கால சந்ததியினருக்கு செய்யும் நற்காரியம் ஆகும்.

2 comments:

J.P Josephine Baba said...

அரிய தகவல்!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி.

Post a Comment