Labels

Thursday, March 22, 2012

ஐ.நா தீர்மானம் மட்டும் தமிழர்களுக்கான தீர்வல்ல



இலங்கைக்கு எதிராக .நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இன்று நிறைவேறியதில் ஓட்டுமொத்த தமிழினத்திற்கே மகிழ்ச்சியான செய்தி. இந்திய அரசு தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக  தமிழகத்தின் அனைத்து கட்சிகளின் ஏக போக குரலும் ஒரு சேர ஒளித்ததற்கு கிடைத்த வெற்றி இது. கலைஞர் மறுபடியும் உண்ணா விரதம் மேற்கொள்வதை இந்திய அரசு ரசிக்கவில்லை என்றாகின்றது.

ஆப்கன் மற்றும் ஈராக்கில் லட்சக் கணக்கான மக்களை கொன்று குவித்த அமெரிக்கவிற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருப்போவது யார்? துன்பவியல் சம்பவத்தையும், வருங்கால லாபங்களையும் மனதில் கொண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழின படுகொலைகளுக்கு ஆதரவு கரம் நீட்டிய இந்தியாவிற்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வரப்போவது யார் என்ற பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

சேனல் 4 தொலைக்காட்சியினால் காலம் கடந்து ஒளிபரப்பட்ட இலங்கை தமிழினப் படுகொலை ஆவணப்படக் காட்சிகள் 2009 ஆம் ஆண்டில் ஈழ பகுதியில் தமிழர்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவிக்கும் போதெ ஒளிபரப்பியிருந்தால் பல்லாயிரக்கணக்கான படுகொலைகளும் தவிர்க்கப் பட்டிருக்கும்.

பத்திரிக்கை அறிக்கைகளின் வாயிலாகவும், பேட்டிகளின் வாயிலாகவும் தமிழ் கூறும் நல்லுலகின் அரசியல்வாதிகள் யாவரும் இலங்கைக்கு எதிரான .நா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுக்கு நாங்கள் தான் காரணம் என வாய் சவாடல் விடத் துவங்கி விட்டார்கள். அன்னார்கள் தயவு கூர்ந்து தமிழகத்தில் இயங்கும் அகதிகள் முகாம்களை ஒருமுறையாவது பார்த்து விட்டு வந்து வாய் கிழியப் பேசுங்கள்.

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஈழ மக்களுக்கு தாய் தமிழகம் செய்த முதல் உபகாரமே ஐ.நா மன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை வெற்றியடையச் செய்திருப்பது தான். ஆயினும் ஐ.நா தீர்மானம் மட்டும் தமிழர்களுக்கான தீர்வல்ல.

1 comment:

Post a Comment