Labels

Saturday, March 24, 2012

இலங்கை வானொலியின் குயில் ராஜேஸ்வரி சண்முகம்

 
முன்னொரு காலத்தில் ராமேஸ்வரம் தீவில் ஒரு வழமை இருந்தது. மணமகள் மறுவீடு செல்லும் போது சீர்வரிசையில் அஞ்சரைப் பெட்டி இருக்குமொ இல்லையோ கண்டிப்பாக ஒரு பிலிப்ஸ் வானொலிப் பெட்டி இருக்கும். அதனை அந்த மணமகளும் மிகச் சிரத்தையோட வானொலிப் பெட்டியில் ஒலிக்கின்ற குரலை தன் தாய் தந்தையின் குரலாகவே பாவிக்க ஆரம்பித்து விடுவாள். இவ்வாறான பந்தம் இன்று தீவில் இல்லை. வானொலி பெட்டிக்கு பதிலாக பெரிய அளிவலான தொலைக்காட்சி பெட்டிகளை சீர்வரிசையில் சேர்த்து விடுகின்றார்கள்.

சமீபத்தில் தீவில் சென்றபோது தனுஸ்கோடி சென்றிருந்தென். இலங்கை வானொலியின் வர்த்தக ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆயினும் தனுஸ்கோடி மக்களுக்கு இலங்கை இருந்து கடல் கடந்து வரும் சக்தி பண்பலையும், தென்றல் பண்பலையையும் கேட்பதை கவனித்தேன்.

தனுஸ்கோடி மக்களுக்கு என்று உள்ள ஒரெ ஊடகம் வானொலிப் பெட்டிகள் மட்டுமெ. அவர்கள் செய்திகள் கேட்பதற்கு தமிழ்நாடு வானொலிகளையும், பொழுதுபோக்கிற்கு இலங்கை வானொலியையுமும் நாடுகிறனர். முன்பு வானொலி கேட்பது போல் இன்று இலங்கை வானொலிகள் இல்லை எனவும், மிகுந்த இறைச்சலாக இருப்பதாகவும், ஆனால் வானொலி கேட்கும் பழக்கத்தை மாற்ற முடியவில்லை என்று தெரிவித்தார் ஒரு தனுஸ்கோடிவாசி என்னிடம்.

நேற்று மாலை பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் காலமானார் என்ற தகவலை இலங்கை வலைத்தளங்களில் வாசித்தவுடனெயெ அவருடன் பணியாற்றிய ஜெயசீலன் ஐயாவிடம்  கைபேசி வாயிலாக தெரிவித்தேன். அன்னார் மறைந்த தகவல் சொன்னதும் அமைதியாகிப் போனார். சிறிதுநேரம் கழித்து இணைப்பில் மீண்டும் வந்தவர் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களுடன் பணியாற்றிய நினைவுகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

மறைந்த வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் பற்றிய மலரும் நினைவுகளை வார இதழ் ஒன்றுக்காக பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது  இன்று எம்முடன் பகிர்ந்து கொண்டார்.அதனையும் விரைவில் வலையேற்றுகின்றேன்.

2 comments:

தனிமரம் said...

தனுஸ்கோடி முதல் திருச்சி வரை தாய் வானொலி இலங்கை ஒலிபரப்பு சர்வதேச ஒலிபரப்பு ஒலித்தது ஒரு காலம் அதில் ராஜேஸ்வரி அம்மா குயிலாக இருந்ததும் நீங்கள் அவர் குரலைக்கேட்ட ஒரு ரசிகன் என்ற போது நானும் மகிழ்கின்றேன் இருவரும் தாய்க்கு ஒரு இரங்கள் பதிவு போட்டு இருக்கின்றோம் .
அவரின் ஆத்மா சாந்தியடை பிரார்த்திக்கின்றேன்!

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

Post a Comment