Labels

Tuesday, March 20, 2012

கவிக்கோவுடன் ஒரு மாலைப்பொழுது...

கடந்த வெள்ளிக்கிழமை (07.03.2012) அன்று நண்பர் சிவதேவனுடன் கவிக்கோ அப்துல் ரகுமானை அவரது இல்லத்தில் சந்தித்தேன். இரண்டு மணி உரையாடலாக இந்தச் சந்திப்பு நீடித்தது. ஒரு இணையதளத்தை உருவாக்க விரும்பி எனது கருத்தை கேட்க அழைத்திருந்தார்.

கவிக்கோவுடன் சிவா
 
இன்றைய தமிழ் எழுத்தாளர்களின் இணையதளங்களையும்  அவை இயங்கும் விதங்களைப் பற்றி பேச்சு ஆரம்பித்தது. சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயமோகன் ஆகிய மூவர்களின் இணையங்களை ஒப்பிட்டு பேசிக் கொண்டிருந்தென்.  இருவர் பேசுவதை வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தான் சிவா.

பொதுவாக இணையத்தில் எழுதுவது யாருக்குச் சென்றடைகின்றது? என்பதை  பற்றி பேச்சு திரும்பியது. ஆனால் இதே கேள்வியை இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து நாம் இருவரும் கேட்க இயலாது?. கைபேசிகளின் வாயிலாக இணையத்தை நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டெ செல்கின்றது. கழிவறை வசதி இல்லாதவர்கள் கூட கைபேசி இல்லாமல் இருப்பதில்லை. அதன் தொழில்நுட்ப உச்சங்கள் விரிவடைந்து கொண்டெ போகிறது. மேலும் இணையத்தில் எழுதுபவை உடனடியாக வாசிக்கப்படுகின்றன. இன்று இல்லாவிட்டாலும் சில வருடங்கள் கழித்து வாசிக்கவும் நேரலாம். இன்று எழுதப்படும் எழுத்து இன்று இறந்த நிலையில் இருந்தாலும் கூட எதிர்காலத்தில் உயிர் பெறும்’’ என்றேன்.

பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களினால் தகவல் தொடர்பு முறைகளும் மாற்றமடைந்து கொண்டு வருகின்றன. அமெரிக்க தேர்தலில் இருந்து எகிப்து புரட்சி வரையிலும் இதன் பயன்கள் அளப்பறியது. ஆனால் இந்தியாவில் சமூக வலைதளங்களை அதிகமாக படித்தவர்களும் மாணவர்களுமெ பயன்படுத்துகின்றார்கள். விரைவில் பாமரர்களும் பயன்படுத்தும் விதங்களில் வலைதளங்களில் புரட்சிகள் மலரும் என்பதை அவரும் ஒத்துக் கொண்டார்.

கவிக்கோவிற்கென்றெ இணையத்தில் பத்துக்கும் மேற்பட்ட வலைப்பூக்கள் இருக்கின்றது. அவரது படைப்புகளையும் உரைகளையும் தொகுக்க வேண்டியதும் காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது. அவர் விரும்பிய இணையதளத்திற்கு என்னால் இயன்ற இணையதள பங்களிப்பை செய்து தருவதாக சொன்னேன்


எனக்கு கவிக்கோ இல்லத்திற்கு செல்லும் போது எல்லாம் அவரது நூலகத்தின் மீது ஒரு கண்ணாகவே இருப்பேன். அது போல் ஒரு நூலகத்தை எனது இல்லத்திலும் உருவாக்க வேண்டும் என்ற ஆவல் 2007ல் முதன் முதலாக அவரது இல்லத்தில் சந்தித்தபோதெ உண்டானது. இன்று சிவா அந்த நூலகத்தின் பின்னணியில் கவிக்கோவுடன் ஒரு புகைப்படம் மட்டுமெ எடுக்க முடிந்தது.

No comments:

Post a Comment