Labels

Thursday, February 16, 2012

காணாமல் போகும் சிட்டுக்குருவி
பறந்த வயல்வெளி அதில் ஒரு பிரமாண்ட கப்பல் விண்ணை நோக்கி பறப்பது போல பல்லாயிரக்கணக்கான சிட்டுக்குருவிகள் பறக்கும் இத்தகைய காட்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று என்னிடம் கேட்டார் 70 வயதுகளை கடந்த நரிகுறவர் சமுதாயத்தை சேர்ந்த அந்த முதியவர். என்னிடம் வார்த்தைகள் இல்லை. நம்மில் எத்தனை பேர் பார்த்திருப்போம்? இனி பார்க்க கூடிய வாய்ப்பு தான் உண்டா?
 
மனிதனுடன் மிக அருகில் உரிமையுடன் நம் வீடுகளிலேயெ கூடு கட்டி வாழும் பறவை சிட்டுக்குருவி மட்டுமெ. வீட்டின் கூரைகள், கிணறுகள் என்று சிட்டுக்குருவியின் கூடுகள் தனித்தன்மையுடன் அமைந்திருக்கும்.

ஆண்மை சக்தியை கூட்டும் என்று காரணம் சொல்லியே நம் முன்னோர்கள் சிட்டுக்குருவியை சுட்டு தின்பதில் பெறும் ஆர்வம் காட்டியதில் இருந்தெ சிட்டுக்குருவிகளுக்கு போதாத காலம் ஆரம்பித்து விட்டது. இன்றைய நவின பாணியிலான வீடுகள் கட்டுதலில் மக்களுக்கு உள்ள மோகம். செல்போன் டவர்களின் கதிர்வீச்சு, மரங்களை எல்லாம் அழித்து உண்டாக்கப்பட்ட பிளாட்கள் என்று குருவிகள் அழிந்ததற்கான சுற்றுப்புற சூழல் காரணங்களை காரணங்களை அடுக்கிக் கொண்டெ போகலாம்


செல்போன் டவர்களை அமைப்பதில் சிட்டுக்குருவிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத விதத்தில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்பே வழங்கியுள்ளது. ஆனால் பின்பற்றுவதற்கு தான் நமக்கு மனதில்லை.

உலகில் உள்ள குருவிகள் இனமே முற்றிலும் மறைந்து விட்டால் அதனால் ஏற்படும் நிசப்தத்தை எழுத்துகளால் எழுதிட இயலாதுஉண்மையில் இது இயற்கை நமக்கு விடுக்கும் எச்சரிக்கை ஆகும். உலகம் மனிதர்கள் மட்டுமெ வாழ்வதற்கல்ல. ஒரு சிறு பூச்சியில் இருந்து பிரமாண்டமான யானைகள் வரையிலும் ஒவ்வொன்றும் ஒவ்வொறு விதத்தில் தொடர்பு கொண்ட சங்கிலி தொடர்போலவெ வாழ்ந்து வருகிறொம். இந்த சங்கிலியில் எங்கேனும் அறுபடுமனால் அது மனித இனத்திற்கும் சேர்ந்த ஆபத்து தான்.

--------------காணாமல் போகும் சிட்டுக்குருவிகளை பற்றி நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த முதியவரின் செவ்வி.

சிட்டுக்குருவியை மையமாக வைத்து குடும்ப உறவை சித்தரிக்கும் உலகப் பிரசித்திப் பெற்ற குறும்படம் :-)

படங்கள்: வலைப்பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் யாவும் ராமேஸ்வரம் நியாயவிலைக் கடையில் சிதறிக் கிடக்கும் அரிசி, கோதுமைகளை சேகரிப்பதற்காக வந்த குருவிகளை எனது கேமிராவில் சிறை பிடித்தேன்.

1 comment:

Kumaran said...

ஏன் என்று தெரியவில்லை..இதை படிக்கும் போது, கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள்தான் மனதுக்கு வந்தன..

@@ பறவைகளே பதில் சொல்லுங்கள் - மனிதர்கள்
உறங்கும் போது நீங்கள் பேசுங்கள்,
மனதுக்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள் @@

எப்படிப்பட்ட வரிகள் இவை...இயற்கையின் ஒவ்வொரு அழிவுக்கும் காரணமாகிறான் மனிதன்..ஆனால், அவனுக்கு தேவைப்படுவது அமைதி..சிரிப்புதான் வருகிறது,,

தங்களது பதிவு சிந்திக்க வைக்கிறது.நல்ல பகிர்வு..நன்றி.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

Post a Comment