Labels

Friday, February 17, 2012

அது ஒரு தட்டச்சு காலம்


சரியாக பத்து வருடங்களுக்கு முன்னர் சகோதரிகள் இருவருக்கும் துணையாக இருக்கட்டுமெ என்று என்னை என் சித்தப்பா தட்டச்சு வகுப்பில் சேர்த்து விட்டார். சகோதரிகள் இருவரும் ஆங்கிலம் லோயர் வகுப்பில் சேர்ந்தார்கள். அடியேனுக்கு ஆங்கிலம் என்றால் சற்று அலர்ஜி.  ஆகவே தமிழ் லோயர் சேர்ந்தேன்.ய..ள..ன..க..ப..க     ..ட்..ம..த..தா..த

 என்ன? ஒரு எழவும் புரியல்லையா. தமிழ் தட்டச்சில் ஆரம்ப பாடமே இது தானுங்கோவ்.

டொக்கு... டொக்குன்னு என் குச்சி விரல்கள் வழிக்க தமிழ் தட்டச்சு கற்க ஆரம்பித்தேன்.

அலுவலக நிமித்தமாக வீட்டிலும் தமிழ் தட்டச்சு இயந்திரம் ஒன்றை வைத்திருந்தார் சித்தப்பா. அப்புறம் என்ன கேட்கவா வேண்டும்.. நான் அந்த மெசினை தட்டிய தட்டில் வீட்டில் பாதி பேருக்கு தலைவலி வந்ததுதான் மிச்சம். அந்த மெசினுக்கு கண் என்று இருந்திருந்தால் ஆழுதெ வடித்திருக்கும் :-)

என் பெரிய அத்தை பெத்த மவராசி ஒன்று வந்து ''டெய் நீ டைப் மெசினை புள்ளைப் பேறு பார்த்தது போதும். அது குட்டி போட்டிருச்சு போய் வேற வேலையை பாரு'' என்று சொல்லும் அளவிற்கு நான் கொஞ்சம் ஓவராகதான் நடந்து கொண்டேன் போலும்.

அப்புறம் என்ன பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுவதில் இருந்து மளிகை கடைக்கு சமான் எழுதுவது வரையிலும் தமிழில் தட்டச்சு செய்து அசத்தியதில் (!) சித்தப்பா கணிணி வகுப்பில் சேர்த்து விட்டார்.

 

அங்கெ வினை வேறு வகையாக விளையாடியது. எனக்கு எம்.எஸ். பெயிண்ட் அப்ளிகேசனை மட்டும் ஒரு மாதம் சொல்லி தந்தார் அந்த கணிணி ஆசிரியர். பெண்டுகளுக்கு மட்டும் மவுசை கையில் பிடித்து மிக பவ்யமாக சொல்லிக் கொடுத்தார். கடுப்பாகிப் போன நான் என் சித்தப்பாவிடம் கணிணி ஆசிரியரை போட்டுக்கொடுத்து விட்டேன்.  அப்புறம் கிளைமாக்ஸ் அந்த கணிணி ஆசிரியரின் திருமணத்தில் முடிந்தது.

போதும் யாம் பெற்ற துன்பங்கள்....
---------
 சரியாக பத்தாண்டுகள் கழித்து இன்று பிராட்வேயில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த டைப்ரைட்டிங்  இன்ஸ்ட்டியூட் ஒன்றிற்கு சென்றென். அதில் 40 ஆண்டுகாலமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு கற்றுத் தரும் 73 வயதான பெரியவர் நம்மாழ்வார் அவர்களிடம் நீண்ட நேரம் உரையாடியதில் இருந்து...

இன்ஸ்ட்டியூட் உள்ளே 50க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு இயந்திரங்கள் உறங்கிக் கொண்டிருந்தன. நான் நம்மாழ்வார் அவர்களிடம் உரையாடிய 1 1/2 மணி நேரங்களில் ஒரு யுவதியும் ஒரு யுவனும் வந்து இரண்டு தட்டச்சு இயந்திரங்களை தூக்கத்தில் இருந்து எழுப்பினார்கள்.

தட்டச்சு பிரிவில் சீனியர்-ஜுனியர் என்ற இரு பிரிவுகள் உண்டு. நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்தால் ஜுனியர். நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் தட்டச்சு செய்தால் சீனியர் தேறிவிடலாம். இன்று அரசாங்க வேலைக்கு போக நினைப்பவர்கள் மட்டும் அரிதாக தட்டச்சு கற்றுக் கொள்ள வருகின்றார்கள். ஆறாம் வகுப்பு கற்றிருந்தால் போதும் அதுவெ தட்டச்சு கற்றுக் கொள்ள மிகக்குறைந்த தகுதி என்றார் பெரியவர் நம்மாழ்வார்.
நம்மாழ்வார்
ஒரு காலத்தில் அதிகாலையில் இருந்து இரவு பத்து மணி வரையிலும் ஓய்வில்லாமல் இங்கே தட்டச்சு மாணவர்களுக்கு கற்று தந்திருக்கின்றேன். ஆனால் இன்று கம்ப்யூட்டர் வருகைக்கு பின்னர்... என்று சற்று மௌமாகிப் போனவர் தொடர்ந்தார். அது ஒரு பொற்காலம் தம்பி என்றார்.

சுறுக்கெழுத்து கற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை தட்டச்சு கற்றுக் கொள்வதைக் காட்டிலும் குறைந்து வருகின்றது. இன்று தமிழகத்தில் தமிழ் சுறுக்கெழுத்து கற்றுதரும் ஆசிரியர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என அழிந்து வரும் தட்டச்சு கலையை கற்றுத் தரும் பெரியவர் நம்மாழ்வார் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.

----

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோத்ரெஜ் நிறுவனம் டைப் ரைட்டர் இயந்திரங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டது. இதுதான் உலகின் கடைசி டைப் ரைட்டர் தயாரித்த நிறுவனமும் ஆகும்

2 comments:

sirippusurendar said...

Enaku nammazhvar thathava nalla therium sir na oru institute la work pannapo exam hall la papen english, telugu, tamil nu valachu valachu pesuvaru manusan thidirnu ethavathu slogam sound ah solluvaru.

sirippusurendar said...

Enaku nammazhvar thathava nalla therium sir na oru institute la work pannapo exam hall la papen english, telugu, tamil nu valachu valachu pesuvaru manusan thidirnu ethavathu slogam sound ah solluvaru.

Post a Comment