Labels

Sunday, February 5, 2012

ரஜினி புத்தன் என்றால் நான் சாரதி- எஸ். ராமகிருஷ்ணன்


  • இயல்விருதை இவ்வாண்டு எழுத்தாளர் எஸ். ராமக்கிருஷ்ணனுக்கு
    அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான பாராட்டு விழாவை உயிர்மை காமராஜர் அரங்கத்தில் பிப்ரவரி 3 அன்று நடைபெற்றது. இனி விழாத்துளிகள்...

  •  கவிஞர் மனுஷ்யபுத்திரன் விழாவிற்கு தலைமை வகிக்க நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, பேரா. ஞானசம்பந்தன், பத்திரிக்கையாளர் விஜய சங்கர், எழுத்தாளர் ஏ. பெருமாள் மற்றும் இறையன்பு ஐ.ஏ.எஸ் ஆகியோர் விழா நாயகன் எஸ். ராவை வாழ்த்திப் பேசினர்.

  • காமராஜர் அரங்கத்தின் முகப்பில் பிரமாண்டமான பேனர்களில் ரஜினியும், ராமகிருஷ்ணனும் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.

  •   எழுத்தாளர் சாருநிவேநிதா கடந்த டிசம்பர்-6 அன்று இதெ காமராஜர்
    அரங்கத்தில் தனது எக்ஸைஸ் நாவலை வெளியிட்டிருந்தார்.  ரஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள ராமக்கிருஷ்ணனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிலும் ஒரெ அளவில் கூட்டம் கூடியிருந்ததாக வலைப்பதிவர்கள் கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தனர்.

  •  எஸ். ராமகிருஷ்ணனை பாராட்ட ஜி.ராமகிருஷ்ணன் ( மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்டு  கட்சியின் மாநில செயலாளர்)  விழா ஆரம்பிக்கும் முன்னரெ முதல் வரிசையில் வந்து அமர்ந்திருந்ததார்.

  •  தமிழ் திரைஉலகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடையில் அமர்ந்து
    ராமக்கிருஷ்ணனை வாழ்த்த பவர் ஸ்டார் சீனிவாசன் (அதாங்க லத்திகா புகழ்) முதல் வரிசையில் அமர்ந்து அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்தார்.

  •  ரஜினிகாந்தை வைத்து 25 படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் மூன்றாவது வரிசையில் வந்து அமர்ந்திருந்தார். பின்னர் ரஜினி மேடைக்கு வந்ததும் விழா ஏற்பாட்டாளர் ஒருவரின் கண்ணில் அவர் பட்டு முதல்வரிசைக்கு அழைக்கப்பட்டார்.

  •  எழுத்தின் மூலம் வாசனையை அறிய முடியுமா? ஆம் முடியும். எஸ்.ரா எழுதிய யாமம் வாசித்து பாருங்கள் உங்களுக்கு அக்தரின் வாசத்தை அறிய முடியும் என எஸ்.ரா தாம் குருவாக கருதும் எழுத்தாளர் ஏ. பெருமாள் குறிப்பிட்டார்.

  •  ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு குதிரையில் பயணிப்பதே கடினமான செயல்.
    மங்கோலியர்கள் ஒரே நேரத்தில் மூன்று , நான்கு குதிரைகளில் பயணிப்பார்கள். அப்போது குதிரைகளுக்கு பயணக் கழிப்பு தெரியாது. அது போல எஸ்.ராவும் ஒரே நேரத்தில் மூன்று, நான்கு குதிரைகளில் பயணிப்பார். பயணக்கழிப்பும் அவரிடம் தெரியாது என்றார் இறையன்பு ஐ.ஏ.ஏஸ்.

  •  கவிஞர் வைரமுத்து தனதுரையில் நான் ராமகிருஷ்ணனை விட குறைவாகவே வாசிப்பவன் என்று தன்னடக்கத்துடன் பாராட்டினார்.

  • பத்திரிக்கையாளர் விஜயசங்கர் நானும் எஸ்ராவும் இரும்புக் கை மாயாவியின் ரசிகர்கள் என பால்ய விடயங்களை நினைவு கூர்ந்தார்.

  •   நம் காலத்தில் வாழும் எழுத்தாளன் எஸ். ராமக்கிருஷ்ணன் என்பதில் எனக்கு சந்தோசமென்றார் பேரா. ஞானசம்பந்தன்.

  •   நான் புத்தனுக்கு (ரஜினிக்கு) கிடைத்த சாரதி போன்ற எளியவன் என்றும்,
    இந்த விருது தமிழ் மொழிக்கும் என் முன்னோர்களுக்கும் கிடைத்த விருது
    என்றார் எஸ்.ரா.

  • குடும்பம் குழந்தை என எந்தவிதமான நினைப்பும் இல்லாமல் சதா எழுதிக்
    கொண்டும், படித்துக் கொண்டும் இருப்பவர் நண்பர் ராமக்கிருஷ்ணன்.
    ராமகிருஷ்ணன் எழுத்துக்கும், வார்த்தைக்கும் அவ்வளவு சக்தி வாய்ந்தது என ராமக்கிருஷ்ணனை வாழ்த்தினார் ரஜினி.

No comments:

Post a Comment