Labels

Saturday, January 28, 2012

பல்லாங்குழி விளையாண்டு இருக்கீங்களா?

மண்ணில் குழி பறித்து விளையாடும் சிறார்கள்


பல்லாங்குழி, என்னை உப்புக்குச் சப்பாணியாக பக்கத்தில் அமரவைத்து எங்கள் வீட்டு பெண்டுகள் மட்டுமெ விளையாடக் கூடிய ஒரு விளையாட்டாக இருந்தது.

பெரும்பாலும் ஆண்கள் பல்லாங்குழி விளையாடுவதை ஏதொ கூச்சத்திற்குரிய விடயமாகவே பார்த்து வருகின்றனர். இது பெண்களுக்கான விளையாட்டாகவே கருதுகின்றனர். அதனாலோ என்னவொ நம் அரசியல் வாதிகள் பல்லாங்குழியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என குரல் எழுப்பவில்லை போலும்

எங்கள் வீட்டில் மரத்திலான, சில்வர் மற்றும் பித்தளை என வித விதமான பல்லாங்குழி இருப்பதையும், எங்கள் வீட்டு பெண்டுகள் விளையாண்டுவதையும் அருகில் இருந்து அவதானித்திருக்கின்றேன்.
பெரும்பாலும் பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அதிக நேரம் பல்லாங்குழி விளையாடுவார்கள். பெண் வீட்டுச் சீதனங்களிலும் பல்லாங்குழி கட்டாயம் இடம் பெறும்
திருமண வைபத்தில்
புதியதாக திருமணம் ஆனவுடன் மணமகள் மற்றும் மணமகள் இருவரும் கட்டாயமாக பல்லாங்குழி விளையாட வேண்டிய சம்பிரதாயம் இன்னும் ராமேஸ்வரம் தீவில் இருக்கின்றது. நான் எங்கள் வீட்டு திருமண வைபவங்களில் பல்லாங்குழி விளையாடும் சம்பிரதாய நிகழ்ச்சிகளில் வழமைபோல் உப்புக்குச் சப்பாணியாக அமர்ந்து பார்த்திருக்கின்றேன் :-)
திருமண ஆன புதியதில் மணமகன் மணமகளுடன் பல்லாங்குழி ஆடும் அந்த பரம ரகசியம் இன்னும் எனக்கு பிடிபடவில்லை. அநே நேரம் குழி பணியாரம் செய்யப் பயன்படும் பொரிக்கான் சட்டியின் குழியும் ஒரெ அளவில் இருப்பது ஏன் என்று பலமுறை யோசித்திருக்கின்றேன் :-)

குழிப்பணியாரச் சட்டி
 எங்கள் ராமேஸ்வர பூர்வீக வீட்டின் முற்றத்தில் தரையில் பல்லாங்குழி விளையாடுவதற்கான வட்டப் பள்ளங்களை வெட்டி வைத்திருந்தார்கள். இன்று முற்றங்களும் கண்ணில் படுவது இல்லை பல்லாங்குழியும் அருங்காட்சியகப் பொருளாக மாறிக் கொண்டிருக்கின்றது.

அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட பல்லாங்குழி
தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சிகளிலும் பல்லாங்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

பல்லாங்குழியில் கடல் சிப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.
எங்கள் தீவில் பல்லாங்குழிக்கு புளிய முத்துக்களும் கடல் சிப்பிகளும் பயன்படுத்தப்படும். அநெகமாக பயன்படுத்துவார்கள். ஒவ்வொரு குழியிலும் ஐந்து முத்துக்கள் நிரப்புவார்கள். அம்மம்மா சொன்னால் அவரது திருமண சீர்வரிசையில் பல்லாங்குழியோடு சேர்த்து கடல் முத்துகளையும் சேர்த்து அவரது தந்தையார் கொடுத்தாராம்.

யாருமெ விளையாட ஆள் கிடைக்காத பொது என் ஒன்று விட்ட  சகோதரி என் சிறுவயதில் என்னை சேர்த்துக் கொண்டு விளையாடுவாள். எல்லா ஆட்டங்களிலும் அவளெ ஜெயிப்பாள். கடந்த வாரம் ராமேஸ்வரம் சென்ற போது சகோதரியின் மகள் ஆசையோடு மாமா வாங்க விளையாடலாம் என்று கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடலாம் என்று கூப்பிட்டால் வழக்கம் போல அப்போதும் நான் உப்புக்கு சப்பாணியாக மருமகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தென்.

5 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

B Muthupandi said...

Super story friend

guna said...

how to play the game pls explain ?

சத்ரியன் said...

இழந்து போனவைகளை எண்ணி ஏக்கமூட்டும் பதிவு.

பாராட்டுக்கள் ரஃபி.

(புளியங்கொட்டை என்று சொல்லி தான் பெரும்பாலும் கேள்விபட்டிருக்கிறேன். புளிய முத்து - ஆஹா அழகிய சொல்!)

கோமதி அரசு said...

எங்கள் வீடுகளிலும் திருமண நலுங்கு விளையாட்டில் பல்லாகுழி விளையாட்டு உண்டு.
அருமையான பகிர்வு.

Post a Comment