Labels

Sunday, January 1, 2012

ரஜினி ஜப்பானுக்கு வருகை தருவார் பேரா. ஹிரோசி யமாஷிடோ.


சென்னை தியாகராஜசாலையில் உள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலின் வரவேற்பரை. ஹோட்டலின் வெளியெ தானே புயல் ரௌத்திரம் பழகிக் கொண்டிருந்தது.

காலை
10 மணியளவில் சந்திப்பது என ஏற்பாடு. நான் அவருடைய கைபேசியில் 9 மணிக்கெ தகவல் சொல்லி 10 மணியளவில் நேரம் வாங்கியிருந்தேன். அவரும் வாங்கோ என்று புன்னைகித்தார். 15 நிமிடங்கள் முன்னதாகவெ சென்று விட்டேன். ஆனால் அவரோ 9.30க்கே தயாராகி ஹோட்டலின் வரவேற்பரையில் எனக்காக  காத்திருந்தார் பேரா. ஹிரோசி யமாஷிடோ.


அந்த நட்சத்திர ஹோட்டலில் ஆங்கில வாசனைக்கு மத்தியில் ஜப்பானிய பேராசிரியரும் சென்னை பல்கலைக்கழகத்தின் மாணவனும் தமிழிலேயெ உரையாடிக் கொண்டிருந்தது பலருக்கு அங்கே வினோதச் செயலாகவெ பட்டது. இரண்டரை மணிநேரம் நீடித்தது எங்களின் உரையாடல். தமிழ் இலக்கியம், ரஜினி காந்த், சினிமா. ஜப்பான், சுனாமி, புகுசிமா, அணு உலைகள் என விரிவாக பேசினார் பேரா. யமாஷிடோ.

பேராசிரியர் யமாஷிடோ. சென்னை பல்கலைக்கழகத்தில் 1987ஆம் ஆண்டு இந்திய தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது ஜப்பான் டோஹகு பல்கலைக்கழத்தின் மொழியியல் பேராசிரியராக பணியாற் பணியாற்றி வருகின்றார்.

ஆரம்பத்தில் சமஸ்கிருதம் கற்ற பேராசிரியர் ஹிரோசி,  திராவிட மொழிகளில் ஒன்றையாவது கற்க வேண்டும் என்ற ஆசையில்  தமிழை தேர்வு செய்து 1981 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அன்றைய சென்னை பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறையில் பேரா. டி.எம்.பி. மகாதேவன், பேரா. பி.கே. சுந்தரம், பேரா. பாலசுப்பிரமணியம் ஆகியோரிடம் பாடம் கற்ற நாட்களை நினைவு கூர்ந்தவர். இன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறை மிகக்குறுகிவிட்டது என வறுத்தப்பட்டார்.

பல்கலைக்கழகத்தில் பயிலும் போது மதுரை தமிழ் சங்கத்தில் தன்னை பேச அழைத்ததையும், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு தான் மாலை போட்டு மரியாதை செய்ததது, சிகப்பு நிற ஆடை அணிந்து ஆதி பராசக்தி கூட்டங்களில் மெரினா கடற்கரையில் பங்கேற்றது பற்றிய அந்த நாள் நியாபகங்களில் மூழ்கினார். 

சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அது போலவெ ஜப்பானின் ஹைக்கூகளின் வடிவமும் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார். உடனெ தன் பேனாவை எடுத்து ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பஷோவின் புகழ்பெற்ற ஹைக்கூகவிதை ஒன்றை ஜப்பான் மொழியில் எழுதினார்.

  பேரா. யமாஷிடோ ஜப்பான் மொழியில் எழுதிய ஹைக்கூ கவிதை
பழைய குளத்தில்
ஒரு தவளை
தாவிக்குதித்தது
அந்த சத்தம்.
The Old Pond
A frog jumps in
Sound of water.

டான்சிங் மகாராஜா என்று நடிகர் ரஜினிகாந்தின் முத்து திரைப்படம் ஜப்பானில் மிக பிரபல்யம். அதற்கு முக்கிய பங்காற்றியவர் பேராசிரியர் ஹிரோசி யமாஷிடோ..  ஜப்பானியர்கள் நம்மைப் போல் பிற மொழிப் படங்களை டப்பிங் செய்து பார்க்க மாட்டார்கள். மாறாக தனது மொழியில் சப் டைட்டிலுடன் பார்க்கும் வழமை அவர்களிடம் உள்ளது. பேராசிரியர் ஹிரோசி தான் அந்த பணியை செவ்வனெ செய்து முடித்தார்.

தமிழ் மற்றும் இந்தி படங்களை ஜப்பானில் திரையிடும் போது பாடல்களை நீக்கி விட்டு தான் திரையிடப் படுகின்றதாம். ஆனால் ரஜினியின் படங்கள் மற்றும் விதிவிலக்காக பாடல்களுடன் திரையிடப்படுமாம். ரஜினி உடல்நலம் சரியில்லாமல் இருந்தது பற்றியும், ஜப்பானில் சுனாமி பாதிப்பின் போது ரஜினியின் இரங்கலையும் நினைவு கூர்ந்தவர். ரஜினி நடித்த முத்து திரைபடத்தை தவிர வேறெந்த திரைப்படம் தங்களுக்கு பிடிக்கும் என கேட்டேன். ஸ்ரீதேவியுடன் ரஜினி நடித்த நான் அடிமை இல்லை படமும், பாபா படமும் மிகவும் பிடித்தம் என்றார்.


பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினியை சந்தித்தது பற்றி பேசிய ஹிரோசி அடுத்த ஆண்டு ஜப்பானில் எந்திரன் படம் வெளியாகும் போது ரஜினி ஜப்பானுக்கு வருகை தருவார் என்றும் ஜப்பானியர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறினார்.

தற்போதைய தமிழ் சினிமாக்களான பருத்தி வீரன், சுப்பிரமணிபுரம் போன்று குறைந்த பட்ஜெட் படங்கள் வெற்றி அடைவதை பற்றி பேசிய பேராசிரியர் உலகம் முழுவதும் தமிழர்கள் இருக்கிறார்கள் முழுக்கு முழக்க வெளிநாட்டில் வாழும் தமிழர்களை மையமாக வைத்து  ஏன் தமிழ் திரைப்படங்கள் வருவதில்லை என கேட்டார்.

கூடங்குளம் அணுஉலைகள் வேண்டுமா? வேண்டாமா என்ற வாத பிரதிவாதங்கள் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில்  புகுசிமா அணு உலையில் ஏற்பட்ட அணுக்கசிவுக்கு பின் அணு உலைகள் தொடர்பாக ஜப்பானில் இன்றைய நிலைபாடு என்ன? கேட்டதற்கு… நாங்கள் ஏற்கெனவே ஹிரோசிமா, நாகசாகியில் விழுந்த அணுகுண்டுகளின் தாக்கமே இன்னும் பல தலைமுறை ஜப்பானியர்களிடம் இருக்கும். அரசாங்கமும் முதலில் அணு உலைகள் தொடர்பாக அவை ஆபத்தில்லை என்றெ மறுத்து வந்தது. ஆனால் புகுசிமா விபத்துக்கு பின்னர் அணுஉலையால் பெறப்படும் மின்சாரத்தை அடியோடு குறைத்து வருகின்றது. தற்போது ஓரிரு அணுஉலைகள் மட்டுமெ இயங்கி வருகின்றது. அவையும் விரைவில் நிறுத்தப்படும்.

பெரும்பாலான அணு உலைகள் மூடப்பட்டதால் கோடையில் மின்சார தட்டுபாடு வருமொ என்ற அச்சம் ஜப்பானியர்களிடம் இருந்தது. ஆனால் நாங்கள் ஒரு மின் விளக்கு தேவை என்றால் அதனை அப்போது மட்டுமெ பயன்படுத்துவொம். தேவையற்ற நேரத்தில் வீணாக அதனை எரியவிட மாட்டோம். ஏசி அறைக்குள் முடங்கி இருப்தை காட்டிலும் காற்றொட்டமாக வீடுகளை மாற்றியும் வருகின்றோம். இதனால் மின்சாரமும் மிச்சமாகின்றது என்றார்.

நம்ம ஊர்  அரசியல்வாதிகளும், சினிமாகாரர்களும், அணு விஞ்ஞானிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஏராளமாக பேரசிரியர் விடம் இருக்கின்றது. ஹோட்டலுக்கு வெளியே தானே புயல் தாண்டவமாடிக் கொண்டிருக்க அவரிடம் விடை பெற்றேன்.

4 comments:

தமிழானவன் said...

அட ஆச்சரியமான தகவல்கள் !! அவர் பேச்சை கொஞ்சம் வீடியோவா எடுத்துப் போட்டிருக்கலாம்

gopalanravindran said...

good rafi

tharmini pathmanathan said...

GOOD

kani said...

very nice

Post a Comment