Labels

Saturday, December 17, 2011

வயலும் வாழ்வும் (சென்னை தொலைக்காட்சி நிலையம்)



1980களின் துவக்கத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் குரலில் இந்த பாடல் ஏகப்பிரபல்யம்.

♥♦♪♫ ♥♦♪♫ ♥♦♪♫  "தாய் நிலம் தந்த வரம் தாவரம், அது தழைக்க தழைக்க மகிழ்வார்கள்யாவரும்" ♥♦♪♫ ♥♦♪♫ ♥♦♪♫

(இது தான் அப்போது வயலும் வாழ்வும் நிகழ்ச்சியின் டைட்டில் சாங்க் - இதனை பூபாளம் ராகத்தில் பாடிக்கொள்ளவும் :-)


சென்னை தொலைக்காட்சி நிலையத்திற்கு பயிற்சி சென்ற நாட்களில் இருந்து எனக்கு வயலும் வாழ்வு நிகழ்ச்சியை எப்படி தயாரிக்கின்றார்கள். அதனை பார்த்துப்புடனும் என்று ஒரே ஆவல்.

இன்னும் ஒரிரு வாரங்களில் பணி ஓய்வு பெற இருப்பவர் தான் அந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்கிக் கொண்டிருந்தார். மெதுவாக பேச்சுக் கொடுத்தேன். மவனெ மாட்டினியா என்றார் போல் என்னை விட லொட லொட என்று பேச துவங்கி விட்டார் :-)

பேரன் வயதிருக்கும் என்னைப் பார்த்து தம்பி என்றே உரிமையுடன் பேசத் துவங்கினார்.
நீங்கள் வயலும் வாழ்வு பார்த்திருக்கீங்களா என்று கேட்டதும் மேற்கண்ட பாடல் வரிகளை பாடிக் காட்டினேன்.  

அவருக்கோ ஆச்சர்யம். தம்பி... இந்த பாடல் ஒளிபரப்பும் போது நீங்கள் பிறந்து இருக்க மாட்டிங்களெ எப்படி தெரியும் என்றார். நான் சிரித்துக் கொண்டெ எல்லாம் கேள்விஞானம் தானுங் ஐயா என்றென்.

''இப்ப வயலும் வாழ்வும் என்ற பெயரில் நிகழ்ச்சி வருவதில்லை பொன்விளையும் பூமி என்ற பெயரில் திங்கள் மாலை 6 மணியில் இருந்து மாலை 6.30 வரையிலும் ஒளிபரப்பாகின்றது'' என்றார்.

தமிழகத்தை பொறுத்ததை மட்டிலும் வெறும் வேளாண் சார்ந்த நிலப்பகுதி கிடையாது. கடல் சார்ந்த பகுதியும் அதிகமாக உள்ள பகுதி. ஆகவெ கடல் சார்ந்த தொழில்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சி தயாரிக்கலாமெ என்றேன்.

கேள்வியை கேட்டதும் தான் தாமதம்... பொசுக்குன்னு கோபப்பட்டுட்டார். ''நீங்கள் நிகழ்ச்சி பார்க்காமல் இப்படி எல்லாம் குற்றம் சாட்ட கூடாது. மீன்வளம் மட்டும் அல்லாமல் கால்நடை வளர்ப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்துதான் நிகழ்ச்சி தயாரிக்கின்றோம் நாங்கள்'' என்றார்.

சரி அவரை விடக்கூடாது இந்தமுறை எப்படியாவது மடக்கிடனும் என்று வயலும் வாழ்வு நிகழ்ச்சியில் மன்னிக்கவும் பொன் விளைகின்ற பூமி நிகழ்ச்சியில் அதிக ஆங்கில உச்சரிப்பு கலப்பதாக குற்றச்சாட்டு இருக்குதுங்களெ என்று சிரித்தென். இப்பத்தான் முன்னவிட கோபப்பட்டார்

''சாதாரணமாக ரிக்சா ஓட்டுபவன் கூட சராசரியாக 100 ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்துவான். அது போல விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப வார்த்தைகளை முடிந்தளவிற்கு தமிழ் படுத்துகின்றோம். எல்லவற்றையும் தமிழ் படுத்தினால் விவசாயமெ படுத்திடும்'' என சிரித்து எனை பயமுறுத்தினார். 

சென்னை தொலைக்காட்சி  நிலைய வளாகத்தை சுற்றி பசுமையாக வைத்திருக்கின்றார்கள். அதனை பயன்படுத்தி பொன் விளையும் பூமி நிகழ்ச்சிக்காக படப்பிடிப்புக்கும் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

வயலும் வாழ்வு இப்போதைக்கு போதும் ஒலியும் ஒளியும் எப்படி தயாரிக்கின்றார்கள் என்று அடுத்த முறை பார்த்திட வேண்டும்.

ஓ.கே ஸ்டார்ட் மியூசிக் 

♥♦♪♫ ♥♦♪♫ ♥♦♪♫  ]
 "தாய் நிலம் தந்த வரம் தாவரம்,
அது தழைக்க தழைக்க மகிழ்வார்கள்யாவரும்"
♥♦♪♫ ♥♦♪♫ ♥♦♪♫  
தன்னானா தன்னானா தானா னனா
♥♦♪♫ ♥♦♪♫ ♥♦♪♫   



1 comment:

மதுசூதனன் கோவிந்தன் said...

அந்த பாடல் கிடைக்குமா

Post a Comment