Labels

Saturday, December 31, 2011

வைகோவை அழவைத்த உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம்
 

தமிழருவி மணியன் சமரசம் செய்து கொள்ளாத தமிழகம் அறிந்த அரசியல்வாதி. நற்றமிழ் பேச்சாளர். எழுத்தாளர் என பன்முக தன்மை கொண்ட பண்பாளர். இதுவரைகாலம் சினமாவிற்காக பேனா எடுக்காமல் இருந்தவர். இப்போது முதன்முறையாக உச்சிதனை முகர்ந்தால் படத்திற்கு வசனங்கள் எழுதியுள்ளார். இனி அவரிடம் பேசியதிலிருந்து....

 
இவ்வளவு காலமாக என்னற்றோர் சினமாவிற்கு அழைத்த போது மறுத்த தாங்கள் தற்போது உச்சிதனை முகர்ந்தால் படத்திற்கு வசனம் எழுதக் காரணம்?

பொதுவாகவே தமிழ் சினிமா குறித்து மிக மோசமான அபிப்பிராயயம் கொண்டவன் நான். இதற்கு முன்பு பலர் என்னிடம் சினிமாவிற்கு வந்து வசனம் எழுத வேண்டும், பாட்டு என்று சொன்ன பொழுது எல்லாம் முதற்கட்டத்திலெயெ முத்தாக மறுதலித்தவன் நான். ஆனால் இந்தப்படத்தின் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் அடிப்படையிலெயெ மிகச் சிறந்த உணர்வாளர். ஈழத்து மக்களின் நலன் குறித்து இந்த தமிழ் மண்ணில் நிறைய பணிகளை மேற்கொண்டு வேள்வியாக நடத்தியவர்.

உச்சிதனை முகர்ந்தால் கதையை இயக்குநர் புகழேந்தி என் வீட்டில் வந்து சொல்லி உலகத் தமிழர்களுக்கு உணர்வு உண்டாக்கும் வகையில் இந்தக்கதையை நான் அமைக்க விரும்புகின்றேன். அதற்காக நீங்கள் என்னோடு இணைந்து பணியாற்ற வேண்டும். வசனங்களை எழுதித் தரல் வேண்டும். ஒரு எலும்புக்கூடாய் இருக்கக் கூடிய இந்தக் கதையை சதையும் நரம்பும் உடைய ஒரு அழகிய தோற்றத்தை உங்கள் வசனங்கள் மூலமாக வார்த்து தர வேண்டும் '' என கேட்டுக்கொண்டார். நானும் ஒத்துக்கொண்டேன்.


உச்சிதனை முகர்ந்தால்  பற்றிச் சொல்லுங்கள்.....

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தமிழ்சினிமாவிற்கே உரிய சகல குணாதியங்களுடன் கூடிய திரைப்படம் இல்லை. தமிழ் இனத்தினுடைய பாரம்பரிய உணர்வுகளை மீட்டெடுப்பதற்காகவும் இனம் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கக்கூடிய ஒற்றுமை உணர்வை மறுஉயிர்ப்பு செய்து அவர்களிடையெ மிகுந்த ஒற்றுமையை கொண்டு வந்து சேர்ப்பதற்காகவும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களில் யாராவது ஒருவருக்கு ஏதாவது காயம் ஏற்பட்டு கண்ணீர் வந்தால் அந்தக் கண்ணீரை துடைப்பதற்கு உலகத்தமிழர் அனைவரும் கரம் நீட்ட வேண்டும் என்கின்ற உணர்வை தூண்டுவதற்காகவும் தான் இந்த உச்சிதனை நுகர்ந்தால் படம் உருவாகி இருக்கின்றது.

புனிதவதி என்ற உண்மையான ஒரு பாத்திரம் அது உயிரோடு உலவி ஈழத்தில் பெற்ற காயங்களை அடிப்படையாக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. 13வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டு அவள் வாழ்வு எப்படி சீரழிக்கப்பட்டது என்பதை மனிதநெயத்தோடு எடுத்துச் சொல்வதுதான் இந்த படத்தின் மையக்கரு.


இன்றைக்கு தமிழ் சினிமா என்று வரக்கூடிய என்னென்ன கலவைகள் இருக்குமொ, அந்தக் கலவையின் எந்தச் சாயலும் இந்தப்படத்தில் இருக்காது. இதில் நகைச்சுவை என்கின்ற பெயரில் ஒரு அருவறுப்பான இரட்டை அர்த்தங்கைக் கொண்ட காட்சிகளோ வசனங்களோ அறவெ கிடையாது. இதில் அங்க அசைவுகளை மிக மோசமாக வெளிப்படுத்தி காம உணர்வுகளை தூண்டிவிடுகின்ற களியாட்டங்கள், குத்தாட்டங்கள் இதில் கிடையாது. இந்தப்படத்தைப் பொறுத்தவரையில் நகைச்சுவை என்ற பெயரில் கேலிக்கூத்தோ, காம விகாரங்களை வெளிப்படுத்துகின்ற பாடல்களோ அல்லது மலினமான ரசனைகளை வளர்தெடுப்பதற்கான காட்சியமைப்புகளொ ஒன்றும் கிடையாது. இரண்டெ கால் மணி நேரம் நீங்கள் ஒரு பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின்  குடும்பத்தில் ஒருவராக இருந்து நேரடியாக கலந்து கரைந்து கண்ணீர் விடக்கூடிய சூழலை இந்தப்படம் உருவாக்கி இருக்கின்றது. இந்தப்படத்தில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததிற்காக உண்மையில் நான் பெருமிதம் கொள்கின்றேன்.


படத்தின் மற்ற அம்சங்களைச் சொல்லுங்கள்?

மிகப்பெரிய பலமாக நான் கருதுவது நான் எழுதிய வசனங்கள் மட்டும் இல்லை இதற்காக இசையமைப்பாளர் அமைத்திருக்கக்கூடிய மிகவும் அற்புதமான இசை. இசையமைப்பாளருடைய பணிதான் இந்தப்படத்தை மிகப்பெரிய அளவில் தூக்கி நிறுத்தும் என்பதில் எனக்கு இரண்டு கருத்து இல்லை.

இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் நம்முடைய இயக்குநர் புகழேந்தி அவர்கள் வியாபார நோக்கத்தை நெஞ்சினில் வைத்துக் கொள்ளாமல் இதை ஒரு கலைவடிவத்தோடு உருவாக்கியிருக்கின்றார். தவத்தின் வெளிபாடுதான் இந்த உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம். இத்திரைப்படம் உலகத்தமிழர்களிடையெ நல்ல மாற்றத்தை நல்ல உணர்வை நிச்சயம் கொண்டு வரும் என்கிற நம்பிக்கை நிரம்ப இருக்கின்றது.


படத்தை பிரிவியூக் காட்சியில் பார்த்த வைகோ கதறி அழுதாராமே?

வைகோ அவர்களும் நானும் சீமானும் மற்ற இன உணர்வு சார்ந்த நண்பர்களும் ஒன்றாக அமர்ந்து இந்தப்படம் முழுவதையும் நாங்கள் பிரிவுக்காட்சியில் பார்த்த போது என் பக்கத்தில் அமர்ந்திருந்த வைகோ பல இடங்களில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டார். அதற்கு பிறகு என் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர் சொன்னார். இது அற்புதமான ஆஸ்கார் விருதுக்குரிய கலை வடிவம் கொண்ட படம். இந்தப்படத்தின் மிகப்பெரிய பலமாக வசனங்கள் வாய்த்திருக்கின்றன. என்றுச் சொன்னார்.


சந்திப்பு: ராமேஸ்வரம் ராஃபி 

(டிசம்பர் 15, 2011 அன்று படம் வெளியாகியுள்ளது. இந்த நேர்காணல் டிசம்பர் 7 அன்று எடுக்கப்பட்டது.)

 

5 comments:

Anonymous said...

oscari konjam vittu vaingappa.... ethuna padaththtai paththi uyarvaa sollanummna oscar neengal pongi poorithuthu pogum tamilar eththunai perukku oscar paththi theriyum. neengal ungal padathin tharaththai solla oscar thaan alavugolaaaa....?

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT....THANKS..!!!

விழித்துக்கொள் said...

padhivu nandru
surendra

Anonymous said...

very good .thanks .marai nj,us.

Aravinthan said...

படம் பார்த்தேன். ஈழத்தின் அவலத்தினை அழகாக எடுத்திருக்கிறார்கள்.

Post a Comment