Labels

Saturday, December 31, 2011

கவனிப்பாரற்ற காலப் பொக்கிஷம் !

நன்றி கல்கி 08.01.2012
   
ஹென்றி இர்வின் என்ற கட்டடக்கலை வல்லுனரால் வடிவமைக்கப்பட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகம் 1896ல் கட்டப்பட்டது. அது மையக்கட்டடம், முகப்புக் கட்டடம், உலோகச்சிலை கலைக்கூடம், குழந்தைகள் அருங்காட்சியகம், தேசியக்கலைக்கூடம், வளர்கலை கலைக்கூடம் என ஆறு பகுதிகளாக உளளது.


மையக் கட்டடத்தினுள் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழும் மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களைப் பதப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். தமிழகத்தில் முதுமக்கள் தாழிகள் அவ்வப்போது தோண்டி எடுக்கப்படுவதுண்டு, அந்த முதுமக்கள் தாழியும் சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களும் அளவில் ஒரே மாதியே இருக்கின்றன.

சிறுவர் அருங்காட்சியத்தில், இந்தியாவிலுள்ள பல்வேறு மாநில மக்களின் உடை கலாச்சாரத்தை அறிவும் விதமாக அவர்களின் கலாசார ஆடைகளை அணிந்த பொம்மைகள் உள்ளன. எகிப்திய, சிந்து சமவெளி, மாயன் எனப் பல்வேறு நாகரிகங்களை அறிமுகம் செய்யும் வகையில் கண்ணாடிப்பேழைக்குள் இருக்கின்றன.

தவிர 1799ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய பீரங்கி, 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கப்பல் நங்கூரங்கள், பல்வேறு சிலைகள் ஆகியன அருங்காட்சியகத்தின் முற்றத்தை அலங்கரிக்கின்றன.

ஆனால் இந்த பெருமைகளை எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அருங்காட்சியத்தில் சில அரிய சிலைகள், குப்பைகளைப் போன்று போட்டு வைத்துள்ளனர். இதனால் இவை அழிந்துவிடும் நிலையில் உள்ளன. விலைமதிப்பில்லாத கலைப¢ பொருட்கள், அருங்காட்சி நிர்வாகத்தினரால் கவனிப்பாரற்றுக் கிடப்பதைக் கண்டு பார்வையாளர்கள் பலர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

அரிய கலைப் பொருட்களை, குப்பைகளாக பாவிக்காமல் வரலாற்றின் அடையாளங்களாக பாவித்து அவற்றைப் பாதுகாத்திட நிர்வாகம் முன் வரவேண்டம் என்பதே அனைவரின் ஆசை. செய்வார்களா-?



No comments:

Post a Comment