Labels

Saturday, November 26, 2011

கடலில் கலக்கும் கண்ணீர்-கல்கி நேர்காணல்

‘இலங்கை ராணுவத்தினரால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்படாத ஒரு மீனவனையாவது உங்களால் ராமேஸ்வரத்தில் காட்டமுடியாது. இலங்கை ராணுவத்தினர் தாக்குதலில் இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு அரசு நிதி உதவி வழங்கினாலும், அந்த பணம், குடும்பத்தின் திருமணம், மரணம் போன்றவற்றுக்குச் செலவழிக்கப்படுகிறது. படித்துக் கொண்டிருக்கும் மகன், பிழைப்புக்கு வேறு வழியின்றிப் படிப்பை நிறுத்தி விட்டு, கடலுக்குச் செல்ல நேரிடுகிறது. திரும்பி வருவோமா என்று தெரியாதா நிச்சயமற்ற வாழ்க்கைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள், “என்கிறார் ராமேஸ்வரத்தை சேர்ந்த ரஃபி. இவர் சென்னை பல்லைக் கழகத்தின் இதழியல்துறை மாணவர். இதழியல் மாணவர் என்ற முறையில் ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டி இருந்தபோது, தன்பேராசிரியரின் ஆலோசனையின்படி, ராமேஸ்வரத்து மீனவர்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளை ‘கடலும் கண்ணீரும்’ என்ற ஆவணப் படமாக எடுத்துள்ளார் ரஃபி.


“தற்போது மீனவர்கள் படுகொலைகள் சற்றுக் குறைந்திருந்தாலும், இலங்கை ராணுவத்தின் மிரட்டல்கள், சித்திரவதைகள் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன.

“ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சுமார் அறுபது நாட்கள் மீன்கள் இனவிருத்திக்காக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அப்போது மீனவர்களுக்கு, அரசு உதவித்தொகை வழங்கப்பட்டாலும், அவர்களின் வாழ்க்கைக்கு அது போதவில்லை என்பதால், அந்த சீசனில் மீனவர்கள் கட்டட வேலைக்கும் பிற கூலி வேலைகளுக்கும் போவது அதிகரித்து வருகிறது. 1964 டிசம்பர் 26 ஆம் தேதி புயலால் பெரும் அழிவுக்குள்ளான தனுஷ்கோடி தீவில் இன்னும் சுமார் நூறு குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்கள் மின்சாரம் கிடையாது. குடிதண்ணீர் கிடையாது. கடலோரத்தில் மண்ணைத்தோண்டி, தண்ணீர் எடுத்துக் குடிக்க வேண்டிய நிலையே நிலவுகிறது. 


‘இந்திய நிலப்பரப்பிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் மணற்பாங்கான பகுதியைக் கடந்து தனுஷ்கோடி செல்ல வேண்டும். சௌகரியமான போக்குவரத்து வசதி இல்லை. நான்கு சக்கரங்களும் இயங்கும்படியாக பிரத்யேகமா வடிவமைக்கப்பட்ட டிரக்குகளையும், ஜீப்களையும்தான் நம்பி இருக்க வேண்டிய நிலைமை. அனைவருமே ஏழை மீனவர்கள். தென்னங் கீற்று வேய்ந்த குடிசைவாசிகள். தனுஷ்கோடியில் 60மாணவர்கள்; ஒரு ஆசிரியர் ; ஐந்து வகுப்புமாக கொண்ட ஒரு தொடக்கப்பள்ளி இருக்கிறது. தனுஷ்கோடிக்குச் சென்று பார்த்தபோது, சாஃப்ட்வேர் துறையில் சாதனைகள் புரிந்துகொண்டிருக்கும் இந்தியாவின் ஒரு பகுதியாக அது என்று சந்தேகம் எழுகிறது” ஆதங்கப்படுகிறார்.

நேர்காணல்: எஸ். சந்திரமௌலி

நன்றி கல்கி 04-12-2011

2 comments:

கொள்ளுமேடு பை.மு.ரிபாயி said...
This comment has been removed by the author.
கொள்ளுமேடு பை.மு.ரிபாயி said...

அஸ்ஸலாமு அலைக்கும்.ஊடகத்துறையில் உனக்கொரு இன்னொரு பரிணாமம் தான் இந்த ஆவணப்படம்.இதழியல் துறையில் முத்திரை பதித்துக்கொண்டிருக்கும் உமக்கு,இன்ஷா அல்லாஹ் இந்தப் படம் புதியதொரு முகவரியை பெற்றுத் தரவேண்டுமென்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.ஏதோ ஒரு சில ஆவணப்படங்களை எடுத்து விட்டு தம்மை ஒரு "ஆவணப்பட இயக்குனர்" என்று பெருமை பீற்றிக்கொள்பவர்கள் நிறைந்த உலகமிது.எனவே.. ஆர்பாட்டமில்லாமல் இன்று வரை அமைதியாக செயல்படுவதை போன்றே இன்ஷா அல்லாஹ் இனிவருங் காலங்களிலும் நீங்கள் சத்தமின்றி சாதனைகள் பல புரிந்திட எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Post a Comment