Labels

Friday, October 7, 2011

சேப்பாக்கம் அரண்மனை: சொல்ல மறந்த கதை

அரண்மனையின் இன்றைய தோற்றம்


இந்தோ-செரானிக்  கட்டடக்கலை முறையில் உருவான முதல் கட்டடம் சேப்பாக்கம் அரண்மனை. கர்நாடக நவாப் முகம்மது அலி ஆர்க்காட்டை விட்டு இடம் பெயர்ந்து சென்னையை தமது தலைமையிடமாக்கிக் கொண்டார். 1768ஆம் ஆண்டு சேப்பாக்கத்தில் நவாபிற்காக அரண்மனையை பால் பெனிபீல்ட் என்ற ஆங்கிலேய பொறியாளரால் இந்த அரண்மனை கட்டப்பட்டது.
அரண்மனையின் வெளித்தோற்றம்
நவாப் முகம்மது அலி தாம் ஆங்கிலேயரிடம் பட்ட கடனுக்காகக் கர்நாடகத்தில் வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயருக்குக் கொடுத்து விட, பின் கி.பி. 1801இல் ஆங்கில கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி பிரபு, கர்நாடகம் முழுவதையும் இந்தியாவிலுள்ள கிழக்கிந்தியக் கம்பெனி அரசுடன் இணைத்துவிட்டார். கர்நாடக நவாப் ‘நாடு இல்லாத நவாப்’ ஆனார். கி.பி. 1855இல் கவர்னர் ஜெனரல் டல்ஹெளசி பிரபுவால் கர்நாடக நவாப் பதவியும் நீக்கப்பட்டது. இதன்பின் நவாப் அரண்மனையில் அரசு அலுவலகங்கள் செயல்படத் தொடங்கின.
சேதமடைந்த சுவர்கள்
இன்று எழிலகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுப் பணித்துறை அலுவலகங்கள், பல துறை அரசு அலுவலகங்கள் அரண்மனை வளாகத்தில் இயங்கி வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்ற அறிவிப்பு பலகைகளுடன் சில அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இங்குள்ள பல கட்டடங்கள் இருநூறு ஆண்டுகள் பழமையானது. இதில் மரங்கள் வளர்ந்து கட்டடங்கள் சிதிலமடைந்ததும் காணப்படுகின்றது. 
மரங்கள் அடைக்கலம் கொடுத்த அரண்மனை
அரசு அலுவலகங்களின் ஆவணங்களை கட்டடங்களின் மேல் தளத்தில் பாதுகாத்து வருகின் றனர். 2007 மார்ச்சில் பழமை யான கட்டடத்தில் இயங்கி வந்த தோட்டக்கலை இயக்குநர் அலுவ லகத்தின் முதல் மாடியின் மேல் கூரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது அலுவ லர்கள் யாரும் இல்லாததால் உயிரி ழப்பு ஏதும் நிகழவில்லை. கட்டடங் களின் கூரையிலுள்ள தண்ணீர் தொட்டிகள்  கட்டடங்களுக்கு மே லும் ஆபத்தை உண்டாக்குகின்றது.
அரண்மனை வளாகத்தில் உள்ள வற்றாத கிணறுகள் பராமரிப் பின்மையால் இன்று கழிவுநீர் தேக்க தொட்டிகளாக மாறியுள் ளன. பழமையான அரசுப் பணியா ளர்களும், பொது மக்களும் தண்ணீர் வசதியின்மையால் சாப் பிடவும், கழிவறை செல்லவும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

சாக்கடைகளாகிப் போன கிணறு

சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்குள்ள கட்டடங்கள் மறுகட் டமைப்பு செய்யப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டு அதிகப் பட்சமாக பெயிண்ட் மட்டுமே அடிக்கப்பட்டது.  வரலாறுகளை சுமந்து கொண்டிருக்கும் இந்தக் கட்டடங்கள் மறுகட்டமைப்புக்காக இன்று காத்திருக்கின்றன. மறுகட் டமைப்புக்கு காலதாமதம் ஆகுமா னால் தொல்பொருள் சின்ன மாகத் திகழும் சேப்பாக்கம் அரண் மனையை நாம் இழக்க வேண்டி வரும்.

தேவைகளை பூர்த்தி செய்யாத தண்ணீர் தொட்டிகள்

2 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லா எழுதி இருக்கீங்க.... வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்க ப்ளாக்ல followers widget வைங்க நண்பா....

Post a Comment