Labels

Saturday, October 8, 2011

உலகின் கடைசி கையெழுத்து தினசரி பத்திரிக்கை

தி முசல்மான் அலுவலக்தின் முகப்பு

 நாம் வாழும் இந்த உலகம் கணிணி உலகம். கணிணியால் ஊடக உலகம் அடைந்த பயன்கள் எண்ணிலடங்காதவை. அதிலும் குறிப்பாக அச்சுத்துறை கணினி தொழிற்நுட்பத்தை பரப்பி டெஸ்க் டாப் பப்ளிஷிங் (டிடிபி) முறையில் அடைந்த பயன்கள் ஏராளம்.

பத்திரிக்கையின் நெகடிவ்
தயாரிக்கப்படுகின்றது

அச்சு இயந்திரங்கள் வருகைக்கு முன்னர் ஓலைச்சுவடிகள், தோல்கள், துணிகள், மரப்பட்டைகள், காகிதங்களில் கைகளில் தான் எழுதப்பட்டன. இவ்வாறு கைகளில் எழுதப்படுவதை Calligraphy என்று அழைப்பர். தமிழில் பெரும்பாலான சிற்றிதழ்கள் கையெழுத்துப் பிரதிகளாக வெளிவந்து அவரைக் கொடி போல ஆறே மாதங்களில் மறைந்து விடும். இன்றைய 24 மணிநேர தொலைக்காட்சி நிலையங்களும், இணையதளங்களும் ஊடகங்களின் தன்மையைவெ மாற்றி வரும் சூழலில் ஒரு தினசரி பத்திரிக்கை  கையெழுத்துப்  பிரதியாகவே  85 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதுவும் நம்ம சென்னை-திருவல்லிக்கேணியில்.

இரண்டு பெண் வனப்பெழுத்தாளர்கள்
கைகளால் பத்திரிக்கைக்கு
எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்

 324 கதவிலக்கம்  திருவல்லிக்கேணி நெடுங்சாலை பழமை வாய்ந்த பெரிய மசூதி அருகே ‘தி முசல்மான்' அலுவலகம் உள்ளது. வெறும் 800 சதுரடியில் இரண்டு மின் விசிறிகள், இரண்டு குழல் விளக்குகள், 6 நாற்காலிகள், 4 மேசைகள் மற்றும் 1950 ஆம் ஆண்டில் வாங்கிய பழைய பிரதியெடுக்கும் இயந்திரம். இவைகள் தான்  முசல்மான் தினசரியின் சொத்துக்கள். 

பத்திரிக்கையின் ஆசிரியர் பத்திரிக்கையின்
நெகடிவ்வை பார்க்கின்றார்.



 உருதுநாளிதழான தி முசல்மான் 1927 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த சையத் அஸ்மத்துல்லாஹ் அன்சாரி என்பவரால் துவங்கப்பட்டது. தற்பொழுது அவரது பேரன் சையது ஆரிஃபுல்லாஹ் இப்போது இதன் ஆசிரியராக உள்ளார்.

பிரதியெடுக்கும் இயந்திரம்
மொழியை கையால் எழுதுவது என்பதே ஒரு சிறந்த கலை. அதை செய்பவர்களை வனப்பெழுத்தர்கள் (calligraphers) என்கிறோம். சீன, ஜப்பான், அரபி மற்றும் உருது எழுத்துக்கள் Calligraphy  அடிப்படையில் எழுதுவதற்காகவே பயிற்சி பெற்ற வனப்பெழுத்தர்கள் இன்றளவிலும் உலகெங்கும் உண்டு. 

தலைமை வனப்பெழுத்தர் ரஹ்மான் குரைசி
முசல்மான் நாளிதழின் சின்னச்சாமி பாலசுப்பிரண மணியன் தலைமை செய்தியாளராக உள்ளார். ரஹ்மான் குரைசி தலைமை வனப்பெழுத்தாளராகவும் சபானா மற்றும் குர்சித் ஆகிய இரு பெண்கள் வனப்பெழுத் தாளராகவும் உள்ளனர். ஆசிரியரையும் சேர்த்தே மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை  ஐந்துதான். இவர்களை தவிர்த்து பம்பாய், கல்கத்தா,டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய பெருநகரங்களில் சிறப்புச் செய்தியாளர்களும் உண்டு.

தலைமை செய்தியாளர்
பாலசுப்பிரமணியன்

இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், தமிழகச் செய்திகள், உள்ளுர் செய்திகள் மற்றும் விளையாட்டுச் செய்திகள் ஆகியன இடம் பெறுகின்றன. நடுப்பக்கத்தில் தலைங்கம் எழுதப்படுகின்றது. மொத்தம் நான்கு பக்கங்கள். தினம் 20,000 பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகும் தி முசல்மான் நாளிதழின் விலை ஒன்று மட்டுமெ. உலகில் கையெழுத்துகளால் எழுதப்படும் ஒரே தினசரி நாளிதழ் முசல்மான் தான் என்பது ஆச்சர்யதக்க சாதனை. இந்தச் சாதனை சென்னையில் நிகழ்வதால் நாமும் மகிழ்ச்சி கொள்வோம்.

No comments:

Post a Comment