Labels

Saturday, September 17, 2011

பாம்பன் பாலம் புகைப்படங்களின் வாயிலாக ஒரு பயணம்

 
அதிகாலை நேரம். மோட்டார் பைக்கில் நானும் எனது சிறிய தந்தையாரும் 15 நிமிடங்களில் வீட்டில் இருந்து பாம்பன் பாலத்திற்கு வந்தடைவோம். பாம்பன் சாலை பாலத்தின் மொத்த தொலைவு 2 1/4 கிலோ மீட்டர் தொலைவு. இதில் அதிகாலை நடைப்பயிற்சிக்காக தினந்தோறும் குறுக்கும் நெடுக்குமாக இரண்டு முறை எனது சிறிய தந்தையார் கடப்பார். எனக்கு அவருடன் நடைப்பயிற்சிக்கு செல்ல விருப்பமில்லை என்றாலும் அதிகாலை சூரிய உதயத்தையும், காலையில் பாம்பன் ரயில்வே பாலத்தில் ராமேஸ்வரம்--&மதுரை ரயில் கடப்பதை பார்க்கவும், விசைப்படகுகள் கரைக்கு திரும்புவதையும் நோக்கவும் தினந்தோறும் அவருடன் மோட்டார் பைக்கில் தொற்றிக் கொள்வேன்.

பாம்பன் பாலத்தின் அதிகாலை சூழலை சாமானியமாக எழுத்தில் வர்ணித்து விட முடியாது. அனுபவிக்க வேண்டும். மெல்லிய குளிரான கடற்காற்று, உடலை தழுவிச் செல்லும் சூரியக் கதிர்கள், பறவைகளின் சப்தங்கள் என எனது வர்னணை நீண்டு கொண்டே செல்லும்.
1911 ஆம் ஆண்டு ஜெர்மானிய என்ஜினியர் ஸ்கெர்ஜர் என்பரால் கட்டப்பட்ட பாம்பன் ரயில்வே பாலம் 1913 ஆம் வருடம் பணிகள் முடிவடைந்தன. பாலத்தின் நடுவில் இரு பக்கம் தூக்குபாலமாக சிறிய ரக கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக வடிவமைத்தார். நூற்றாண்டை கண்ட பாம்பன் ரயில்வே பாலம் ராமேஸ்வரத்தீவை தமிழகத்தோடு இணைக்கும் ஒரே சாத்தியமாக 1989 ஆம் ஆண்டு வரையிலும் இருந்தது. 1989 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் பெயரால் ராஜீவ்காந்தியால் சாலை பாலம் திறந்து வைக்கப்பட்டது.
பாம்பன் பாலத்தினை பிரபல புகைப்படக் கலைஞர் இக்பால் எடுத்தப் புகைப்படங்களும், சங்கர் சிமெண்டின் விளம்பரத்தையும் என் வயதை எட்டியவர்கள் பார்த்திருக்கலாம். இது தவிர நந்தா, கன்னத்தில் முத்தமிட்டால், இயற்கை, சின்னா, கோ படங்களில் பாம்பன் பாலத்தை காட்டியிருப்பார்கள். கௌதம் மேனன் இயக்கத்தில் செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலுக்கு முதல் முறையாக ஆகாய மார்க்கமாக பாம்பன் பாலத்தை பதிவு செய்திருப்பார். நான் முன்னர் சொன்னது போல் புகைப்படக் கலைஞர் இக்பால் ஹெலிகாப்டர் வாயிலாக தமிழ்நாடு டூரிசத்திற்காக ராமேஸ்வரம் தீவையே படமெடுத்து குவித்தார்.


நான் எடுத்த இந்த புகைப்படம் விகடனில் பிரசுரமானது :-)

  

தற்போது பாம்பன் பாலத்தின் கீழே ஒரு பூங்காவும், அதன் அருகிலேயே படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. பாலத்தின் அருகே படகில் சவாரி செய்த வண்ணம் பவளப்£றைகளையும், மன்னார் வளைகுடாவின் அழகையும் ரசிக்கலாம். 
ஹி..ஹி..ஹி எல்லாம் ஒரு விளம்பரம் தான் :-)

6 comments:

- யெஸ்.பாலபாரதி said...

ஊருக்கு போகனும்கிற ஏக்கத்தை அதிகப்படுத்திய பதிவு இது. ம்ஹூம்.. சேர்ந்தாப்ல.. ஒரு நாலுநாள் லீவு கிடைக்க மாட்டேங்குது.. :(

ஆமினா said...

உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

நேரமிருக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_28.html

J.P Josephine Baba said...

அருமையான பதிவு இன்று தான் கண்டுள்ளேன். வாழ்த்துக்கள்!

Peace said...

மிக நேர்த்தியான தகவல்களுடன் எளிய நடையில் உள்ளது இந்த கட்டுரை சில குறும்பு புகைப்படகளும் உம்மை நிருபித்துள்ளது... நான் அனுபவித்த என் மண்ணின் வாசனையை தற்போது உங்கள் வாயிலாக கேட்கிறேன் நண்பரே.... உமது ஆக்கங்கள் தொடர எனது வாழ்த்துக்கள்

Theking Senthil said...

எளிய நடையில் அழகான பதிவு.நன்றி நண்பா !

Theking Senthil said...

எளிய நடையில் அழகான பதிவு.நன்றி நண்பா !

Post a Comment