Labels

Thursday, September 15, 2011

கல்வி நிறுவனங்கள் மாணவர்களை தொழில் முனைவராக உருவாக்க வேண்டும்-அப்துல் கலாம்

 
மதுரவயல் வேலப்பன் சாவடியில் டாக்டர். எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 20ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா (செப்-15) அன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு அப்துல் கலாம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நமது நாட்டிற்கு வேலை கொடுப்பர்கள் அதிகம் தேவை. எனவே மாணவர்கள் தொழில் முனைவராக மாற வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் கல்வி நிறுவனங்களும் மாணவர்களை தயார் செய்ய வேண்டும்.

பட்டம் பெற்று விட்டீர்கள் என நின்று விடாமல் கடின உழைப்புனும், விடா முயற்சியுடனும் குறிப்பாக குறிக்கோளுடனும் வாழ வேண்டும். இவை மூன்றும் இணையும் போது உங்களின் வெற்றி எளிதாகும்.

கனவுகளை கண்டவர்கள் தான் மனித எல்லைகளை கடந்துள்ளார்கள் என்பது வரலாறு. தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரஹாம்பெல், ரைட் பிரதர்ஸ், ராமானுஜம், சர்.சி.வி. ராமன், விக்ரம் சாராபாய், எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோர் தங்களுக்கான சிறந்த குறிக்கோளையும், அதை அடைய தனித்தன்மையான பண்புகளை வளர்த்துக் கொண்டதுமே காரணங்களாய் அமைந்தது.

பறக்க வேண்டும் என்கின்ற உணர்வு வாழ்க்கையின் லட்சியத்தை அடைய வழி வகுக்கும். நான் ஒரு போதும் பூமியில் தவழ மாட்டேன். வானமே எல்லை என்ற லட்சியத்துடன் நீங்கள் வாழவேண்டும். இப்போது கூறுகின்றேன். என்னால் முடியும்;  நம்மால் முடியும்; இந்தியாவால் முடியும். என அப்துல் கலாம் பேசினார்.

விழாவில் எம்.டெக், எம்.டி.எஸ், பி.டி.எஸ், பி.எஸ்.சி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. முதல் மூன்று இடங்களை பெற்ற இளநிலை மாணவர்களுக்கு தங்கப்பதக்கத்தையும், பட்டங்களையும் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் வழங்கினார். பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார், துணைவேந்தர் பி அரவிந்தன், அறக்கட்டளை இயக்குநர் ஏ. ரவிக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பங்கேற்பு : ராமேஸ்வரம் ராஃபி

No comments:

Post a Comment