Labels

Monday, September 19, 2011

அகிரா குரசோவாவின் கனவுகள்

கடந்த செப்டம்பர் 12 அன்று எனது பல்கலைகக்கழக பாடசாலையில் துறைத்தலைவரின் தூண்டுதலினால் அகிரா குரசாவாவின் கனவுகள் (Dreams ) திரைப்படத்தை பார்த்தேன். 1990ல் வெளிவந்தது. இத்திரைப்படம் வெளிவந்தது. அதெ ஆண்டு அகிராவிற்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருதும் அளிக்கப்பட்டது.

சராசரி திரைப்படத்திலிருந்து மாறுபட்டு தொடர்ச்சியானா கதை, காட்சிகள், கதாபாத்திரங்கள் என்றில்லாமல் 8 கனவுகளின் தொகுப்பாக பயணிக்கின்றது இத்திரைப்படம்.
                                                      -----------------------இளம் ஓவியன் ஓவியக் கண்காட்சியில் வான்காவின் ஓவியங்களை பார்வையிட்டுக் கொண்டிருப்பார். பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த ஓவியங்களின் ஊடாக பயணம் புரிவார். ஒரு தூக்குப்பாலத்தின் நடுவே குதிரை வண்டி நிற்கும், கீழே ஒரு ஆறு ஓடிக் கொண்டிருக்கும். ஆற்றின் ஒரு கரையில் நின்று கொண்டிருக்கும் பெண்களிடம் வின்சென்ட் வான்காவை எங்கே பார்க்கலாம் என்று ஓவியன் கேட்பார். அதற்கு அந்த பெண்கள் வின்சென்ட் ஒரு மனநலம் சரியில்லாதவர் எனவே கவனமாக நடந்து கொள்ளுங்கள். பாலத்தைக் கடந்து போனால் பார்க்கலாம் என்று பகடி செய்வார்கள் பெண்கள். நன்றி கூறிய இளம் ஓவியன் பாலத்தைக் கடந்து ஒரு தனி குடியிருப்பை கடந்து கோதுமை வயல்களில் வான்காவை பார்ப்பார். இளம் ஓவியன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள அதனை பற்றி கவலைப்படாத வான்கா ‘நான் சூரியன் மறைவதற்குள் ஓவியத்தை வரைந்து முடிக்க வேண்டும்’ என்று கூறி வேறொரு இடத்திற்கு பயணமாகி விடுவார். மீண்டும் ஓவியன் வான்காவின் பல்வேறு ஓவியங்களின் வாயிலாக பயணம் புரிந்து மறுபடியும் வான்காவை பார்ப்பார். அப்போது கோதுமை வயல்களில் காகங்களின் கூட்டங்கள்  அலைமோத காகங்கள் ஓவியங்கள் மூலமாகவே மீண்டும் ஓவியக் கண்காட்சியில் நிகழ்காலத்திற்கு வருவார் இளம் ஓவியன். இந்தக் கனவில் நவீன ஓவியங்களை கனவுகளின் வாயிலா உருவகப்படுத்தியிருப்பார்.

                                          -----------------------------

ராணுவ கமாண்டோ ஒருவர் குகையை கடப்பதற்கு முனைவார். ஒரு நாய் குரைத்துக் கொண்டே கமாண்டோவை நோக்கி ஓடி வரும். அந்த நாயை கடந்து குகையின் மறுவாயிலுக்கு கமாண்டோ வந்தடைவார். அப்போது குகையின் உள்ளே இருந்து ஒரு ஜோடி பூட்ஸ் காலணிகளின் சப்தம் வரும். சப்தத்தை கேட்டு திடுக்கிட்டு பார்க்கும் கமாண்டோ அங்கே தனது படையில் போர் புரிந்து இறந்த ஒரு ராணுவ வீரனை பார்ப்பார். அந்த வீரன் தான் இறந்துவிட்டதாகவும், எனது வீடு அதோ விளக்கு எரிகின்றதே அதின் அருகில் உள்ளது. எனது பெற்றோர்கள் எனக்காக காத்திருக்கிறார்கள் என்று அழுது புலம்புவான். கமாண்டோ இது கனவு நீ இறந்து போனது உண்மை. போய் நிம்மதியா துயில் கொள் என்று அனுப்பி விடுவார். அந்த ராணுவ வீரனும் விடை பெற்று விடுகிறான். சிறிது நேரத்தில் பல ஜோடி காலணிகளின்  மிடுக்கான ராணுவ நடைக்கான பூட்ஸ் சப்தம் கேட்கும். ஒரு படையே கமாண்டோ முன் வந்து நிற்கும். அந்த படையின் முன்னே உரையாற்றும் கமாண்டோ நீங்கள் அனைவரும் இறந்து விட்டீர்கள். அதுதான் உண்மை. நானும் உங்களுடன் சேர்ந்து  இறந்து விடவே நினைத்தேன் எனக் கூறி அந்த வீரர்களை எல்லாம் நிம்மதியாக துயில் கொள்ளுமாறு உத்திரவிட்டு அனுப்பி விடுவார். மறுபடியும் ஆரம்ப காட்சியில் கமாண்டாவோ சீண்ட முயன்ற நாய் மீண்டும் சீண்ட முயல... குகை கனவு முடிந்து விடும். மரணத்தினுல் வாழ்வோம் என்ற தோனியிலான கனவு இது.
                                                         -----------------------------

அணு ஆயுதங்களின் விளைவுகளைப் பற்றிய இரண்டு கனவுகளில் ஒற்றை கொம்புடன் வரும் மனிதனும், கதிர் வீச்சுகளினால் ராட்சத பூக்களும், ஒற்றை கண் பறவைகளுமாக அணு ஆயுதங்களின் தீமையை தனது அனுபவத்தில் இருந்தே பகிர்ந்து கொள்கின்றார் அகிரா. இரண்டாம் உலகப்போரில் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்காவின் அணு ஆயுத தாக்குதல் மட்டுமின்று நாம் இன்றைய கல்பாக்கம், கூடங்குளம் அணு மின்நிலைய அபாயங்களையும் இங்கே நாம் பொருத்தி பார்க்க முடிகின்றது.

மேலும் இயற்கையை அழித்து அதனை விட்டு விலகி வாழும் மனிதர்களைப் பற்றி கனவுகள் பதிவில் தும்பை மரம் எப்படி இருக்கும் என குழந்தை கேட்பது போன்ற காட்சிகள் இன்றைய நகர வாழ்வின் எதார்த்தத்தை பதிவு செய்கின்றது. பனி மழையில் தனி ஆளாக தனது சகாக்களுடன் தனது முகாமை நோக்கி பயணிக்கும் மற்றொரு கனவும்  என்னை கவர்ந்தது.

இயற்கையோடு ஒன்றி வாழும் கிராமத்தில் பயணிக்கும் இளைஞன  இளைஞன் குழந்தைகள் பாறைக்கு பூக்களை வைப்பதும், 103 வயது முதியவர், சிறுவனின் இறுதி ஊர்வலம் என நீரோடையின் மத்தியில் சந்திப்பு என தீவில் இருந்து வெளியேறிய என்னை போன்றோர்களுக்கு நல்ல அனுபவம்.

அகிரா குரோசோவாவின் கனவுகள் திரைப்படம் மூலம் போர், அணு ஆயுத அபாயங்கள், நவீன ஓவியங்கள், இயற்கையை விட்டு விலகி நிற்கும் மனிதம் என பல்வேறு பரிணாமங்களை தனது கனவுகள் படத்தின் வாயிலாக பதிவு செய்திருக்கின்றார்.

1 comment:

kumaran said...

சிறந்த விமர்சனம். நன்றி

Post a Comment